உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / புக்கத்துறை நெடுஞ்சாலையில் மண் குவியல் அகற்றம்

புக்கத்துறை நெடுஞ்சாலையில் மண் குவியல் அகற்றம்

உத்திரமேரூர்: நம் நாளிதழில் வெளியான செய்தியையடுத்து, புக்கத்துறை நெடுஞ்சாலையில் இருந்த மண் குவியல்அகற்றப்பட்டது. உத்திரமேரூரில், புக்கத்துறை -- மானாம்பதி நெடுஞ்சாலை செல்கிறது. இச்சாலையை பயன்படுத்தி, சுற்றுவட்டார கிராமத்தினர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இருவழிச் சாலையாக இருந்த இச்சாலை, மீனாட்சி கல்லுாரி முதல், உத்திரமேரூர் வரை, 3.6 கி.மீ., துாரத்திற்கு, 2023-ல், 26 கோடி ரூபாய் செலவில், நான்குவழிச் சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. இச்சாலை முறையாக பராமரிப்பு இல்லாமல், மையத் தடுப்பின் இருபுறமும் மண் குவியலாக இருந்தது. மண் குவியலில் புற்கள் வளர்ந்து இருந்தன. இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் நிலைத்தடுமாறி, விழுந்து விபத்தில் சிக்கும் நிலை இருந்தது. இது குறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, புக்கத்துறை நெடுஞ்சாலையின், மையத் தடுப்பின் இருபுறமும் இருந்த மண் குவியல்களை, நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் அகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !