மேலும் செய்திகள்
தினமலர் செய்தியால் திறப்பு
26-Nov-2025
தினமலர் செய்தி எதிரொலி கழிவுநீர் அகற்றம்
26-Nov-2025
சாயல்குடியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
23-Nov-2025
மின் கம்பிகள் சீரமைப்பு
23-Nov-2025
இடையூறு செடிகள் அகற்றம்
23-Nov-2025
வடமதுரை: வடமதுரையில் மழைநீர் தேங்காத வகையில் மேம்பாலம் அமைக்க தினமலர் செய்தி எதிரொலியாக நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளுடன் கரூர் காங்., எம்.பி., ஜோதிமணி ஆய்வு செய்தார். வடமதுரையில் ஒட்டன்சத்திரம் நெடுஞ்சாலை, திண்டுக்கல் திருச்சி நான்கு வழிச்சாலை குறுக்கிடும் பகுதியில் மேம்பாலம் அமைக்காததால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. மழை நேரத்தில் நீர் வெளியேற வழியின்றி தேங்குகிறது. இங்குள்ள சிக்கல்கள் குறித்து தினமலர் நாளிதழ் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகிறது. இதன் எதிரொலியாக தற்போது ரூ.30 கோடியில் மேம்பாலம் கட்டப்பட உள்ளது. ஏற்கனவே கரூர் எம்.பி., தொகுதிக்குள் மேம்பாலம் கட்டப்பட்ட சில இடங்களில் மழை நீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்கும் பிரச்னை உள்ளது. இதுபோன்ற சிக்கல் வடமதுரையிலும் ஏற்பட கூடாது என்பதற்காக ஜோதிமணி எம்.பி.,ஆய்வு செய்தார். தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குனர் அருண்பிரசாத், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் சுப்பையன், பாண்டி, காங்., மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சாமிநாதன், ரங்கமலை, வட்டார தலைவர் பாலமுருகன் பங்கேற்றனர்.
26-Nov-2025
26-Nov-2025
23-Nov-2025
23-Nov-2025
23-Nov-2025