திருத்தணி மருத்துவமனை கழிப்பறைகள் பளிச்
திருத்தணி:நம் நாளிதழில் வெளியான செய்தியால் திருத்தணி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் கழிப்பறைகள் சுத்தமாகின. திருத்தணியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, புதிய ஐந்து அடுக்குமாடி கட்டடத்தில் இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து சிகிச்சை பெறுகின்றனர். 300க்கும் மேற்பட்ட நோயாளிகள் உள்நோயாளிகளாக தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனர். ஆனால் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை பராமரிப்பு இல்லாமல் இருந்தது. இதனால் மருத்துவமனையில் உள்ள கழிப்பறைகள் அசுத்தமாகவும் ஒரு மின்துாக்கி செயல்படாமல் பழுதாகியும் இருந்தது. இதனால் நோயாளிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இது குறித்து நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் மருத்துவமனையில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து, அசுத்தமாக இருந்த கழிப்பறைகளை ஊழியர்கள் சுத்தப்படுத்தினர். மேலும் பழுதாகியிருந்த மின்துாக்கியை, சீரமைத்து இயக்க செய்தனர். இதனால் நோயாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.