உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

தமிழக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன்: பாலியல் வழக்கில் சென்னையில் அ.தி.மு.க., பிரமுகரும், மதுரையில் பா.ஜ., பிரமுகரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவை குறித்தெல்லாம் அண்ணாமலையும், பழனிசாமியும் பேசியிருக்க வேண்டும்; ஏன் பேவில்லை? காரணம், குற்றம் இழைத்தவர் தங்கள் கட்சியைச் சேர்ந்தவர் என்பது தான். இதில் இருந்தே, அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும் கள்ளக் கூட்டணி அமைத்துள்ளதை தெரிந்து கொள்ளலாம்.டவுட் தனபாலு: அவங்க கட்சியினரை கைது பண்ணியதை, அண்ணாமலையும், பழனிசாமியும் கண்டிக்கலையே... அப்புறமும் அதை பத்தி பேச என்ன இருக்கு...? நீங்க சொல்றதை பார்த்தா, 'பாலியல் குற்றவாளிகள் எல்லா கட்சிகளிலும் தான் இருக்காங்க... எங்க கட்சியை மட்டும் குறை சொல்லலாமா'ன்னு கேட்காம கேட்குறீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!இலங்கை அரசின் இணை அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்: இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில், இந்தியாவின் பங்கு இன்றியமையாதது. எங்கள் நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லவும், பொருளாதார வளர்ச்சிக்கும் உங்கள் பங்களிப்பு தேவை. இலங்கைக்கான கல்வி, விளையாட்டு குறித்த உதவிகளை, தமிழக அரசிடம் கோரியுள்ளோம்.டவுட் தனபாலு: இலங்கைக்கு எவ்வளவோ உதவிகளை இந்தியா செய்திருக்கு... செய்யவும் காத்திருக்கு... ஆனாலும், தமிழக மீனவர்களை, ஏதோ பயங்கரவாதிகள் ரேஞ்சுக்கு கைது பண்ணி சிறையில் அடைப்பதும், அவங்க படகுகளை பறிமுதல் செய்வதையும் நிறுத்திட்டு, எங்களிடம் உதவி கேட்டால் என்ன என்ற, 'டவுட்' வருதே!பத்திரிகை செய்தி: 'ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலை, முக்கிய கட்சிகளான அ.தி.மு.க., - பா.ஜ., புறக்கணித்துள்ளதால், அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் அடங்கிய பட்டாளங்கள் தொகுதியில் முகாமிட வேண்டாம்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.டவுட் தனபாலு: அதுவும் சரிதான்... அடுத்த வருஷம் சட்டசபைக்கு பொது தேர்தல் வருது... எல்லா அமைச்சர்களையும் இப்பவே ஈரோட்டில் களமிறக்கி, அவங்க சக்தியையும், பல கோடி ரூபாயையும் வேஸ்ட் பண்ண வேண்டாம்னு முதல்வர் முடிவு பண்ணிட்டாரோ என்ற, 'டவுட்'தான் வருது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Barakat Ali
ஜன 18, 2025 22:19

எங்க ஆதரவாளர் செஞ்சா மட்டும் என்ன தப்பு ? இதுதான் அம்மையாரின் மறைமுக கேள்வி ......


Yes your honor
ஜன 18, 2025 09:49

கலக்ஷன் இல்லை என்றால் செலக்ஷன் இல்லை என்று ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் முடிவெடுத்து சிமானை கைதூக்கிவிட்டால் தான், தமிழக மக்களுக்கு 2026 எலக்ஷன் நேரத்தில் கழகத்தால் வாரியிறைக்கப்படும். இல்லையேல் வெறும் 150 ஓவாதான்.


Dharmavaan
ஜன 18, 2025 08:44

ஒரு மாறுதலுக்கு நா த க ஜெயிக்க வேண்டும்


D.Ambujavalli
ஜன 18, 2025 06:12

ஆளும் ஆட்சியானால், ‘சார் / சார்களை ‘ அண்டங்காத்து, சில்லரையைப் பிடித்துவிட்டு, கேஸை மூடுவார்கள் எதிர்க்கட்சி ஆயிற்றே, அளவுக்குமேல் துள்ளுவார்கள் இதே இவர்கள் எதிர்க்கட்சியாக இருந்தாலும் இதைத்தான் செய்வார்கள்


Anantharaman Srinivasan
ஜன 18, 2025 01:16

ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலை, முதல் போடாமலேயே ஜெயிக்க திமுக திட்டம்.


முக்கிய வீடியோ