உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

நீலகிரி தி.மு.க., - எம்.பி.,ராஜா: மலைப்பாகவும் இருக்கிறது; வியப்பாகவும் இருக்கிறது; மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. தலைவர் கருணாநிதியோடு பயணித்தோம்; முதல்வர் ஸ்டாலினுடன் பயணித்தோம். இப்போது, உதயநிதியுடன் பயணிக்கிறோம். மூலவராக ஸ்டாலின் இருந்து ஆட்சி, கட்சியை நடத்துகிறார்; உற்சவராக உதயநிதி பணியாற்றுகிறார்.டவுட் தனபாலு: கடவுள் நம்பிக்கையே இல்லாத நீங்க, மூலவர், உற்சவர்னு பேச ஆரம்பிச்சுட்டீங்களே... 'எல்லா கோவில்லயும், மூலவரும், உற்சவரும் எந்த காலத்துலயும் மாறவே மாட்டாங்க... அதே மாதிரி, தி.மு.க., தலைமை பதவியும் ஒரே குடும்பத்துக்கு மட்டுமே சொந்தமானது' என்பதை தான் இப்படி நாசுக்கா குத்திக் காட்டுறீங்களோ என்ற, 'டவுட்' வருது!மத்திய தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் முருகன்: சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்தை, எதற்காக அவசர அவசரமாக மூடினர் என மக்களுக்கு எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை. அடிப்படை வசதி மற்றும் முன்னேற்பாடு இல்லாமல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை அவசரமாக திறந்து வைத்தது, தி.மு.க., அரசின் கையாலாகாத்தனத்தை காட்டுகிறது. டவுட் தனபாலு: தமிழகத்துல எல்லா ஊர்களிலும், புதிய பஸ் நிலையங்கள் திறந்தாலும், பழைய பஸ் நிலையங்களும் பயன்பாட்டில் இருக்குது... ஆனா, நகரின் மையத்தில் இருக்கும் கோயம்பேடு பஸ் நிலையத்தை, அவசர அவசரமா மூடியிருப்பது, தனியார் நிறுவனத்துக்கு தாரைவார்க்க போறாங்களோ என்ற, 'டவுட்'களை எழுப்புது!சிவகங்கை தொகுதி காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம்: தமிழகத்தில் பூரண மதுவிலக்கு என்பது சாத்தியம் கிடையாது. மதுக்கடைகளை படிப்படியாகக் குறைக்கலாம்; திறக்கும் நேரத்தை குறைக்கலாம். இதைத் தவிர பூரண மதுவிலக்கு என்பது முடியாத காரியம். அவ்வாறு செய்தால், கள்ளச் சந்தையில் மது விற்பனை அதிக அளவில் வளர்ந்து விடும்.டவுட் தனபாலு: அரசு நினைத்தால், முடியாத காரியம் எதுவும் உள்ளதா என்ன... அப்பாவி பெண்களின் தாலியை காப்பாற்றும் எண்ணம் அரசுக்கும், ஆட்சியாளர்களுக்கும் இருந்தால், பூரண மதுவிலக்கு என்பது, ஒரே கையெழுத்தில் முடியும் சங்கதி என்பதில், எந்த, 'டவுட்'டும் இல்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
பிப் 13, 2024 06:45

அன்றாடம் கூலி. வேலை. செய்பவர்கள் தினம் தினம் . அடுத்த. மாநிலம். சென்று. குடிக்க. முடியாது அந்த வக்கயில் குடிப்போரின் எண்ணிக்கை. குறையும் . தினம் தினம் கூலியை. டாஸ்மாக்குக்கு. மொய் எழுதுவது குறையும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை