உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி: பா.ம.க., தலைவர் அன்புமணி, வேடந்தாங்கல் பறவை போல, அடிக்கடி கூட்டணியை மாற்றி வருகிறார். தண்ணீர் இருக்கும் இடத்தை தேடி பறவைகள் செல்லும். அதுபோல கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அக்கட்சி நிறுவனர் ராமதாஸ், பா.ஜ.,வுக்கு பூஜ்ஜியம் மதிப்பெண் தான் கொடுத்தார்; தற்போது அவர்களுடன் கூட்டணி வைத்துள்ளார்.டவுட் தனபாலு: 'அடிக்கடி கூட்டணி மாறும் அன்புமணியை, எதிர்காலத்தில் எந்த தேர்தலிலும், அ.தி.மு.க., கூட்டணியில் சேர்த்துக்கவே மாட்டோம்'னு சொல்ற துணிவு உங்களுக்கு இருக்குதா என்ற, 'டவுட்' எழுதே!நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: 'ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியாது' என்கின்றனர். தரையில் இருந்து இயக்கி, விண்வெளிக்கு ராக்கெட்டை அனுப்பும் போது, ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் எதுவும் செய்ய முடியாதா... ஓட்டுப்பதிவு இயந்திரத்தை, ஒரு நாள் சாலையில் போட்டு உடைக்கும் காலம் வரும். டவுட் தனபாலு: ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும்னு சொல்ற நீங்க, ஓட்டுப்பதிவு இயந்திரம் இருக்கிற வரைக்கும், தேர்தலை புறக்கணிக்கிறேன்னு அறிவிச்சிடலாமே... இதனால, உங்க கட்சியின் வேட்பாளர்களுக்கு, 'கட்டுத்தொகை' அதாங்க, 'டிபாசிட்' பணம் மிச்சமாகும் என்பதில், 'டவுட்'டே இல்லை!முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்: லோக்சபா தேர்தலில் தொண்டர்களை களம் இறக்கினால், பொருளாதார செலவு ஏற்படும்; சோதனைகளை தொண்டர்கள் சந்திக்க நேரிடும். அந்த மாபெரும் பொறுப்பை நானே ஏற்று, ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறேன்.டவுட் தனபாலு: சாதாரண தொண்டர்களை தேர்தல்ல நிறுத்தி, அவங்களுக்கு செலவும் பண்ணி, தேர்தல்ல ஜெயிக்க வைக்கிறது உங்க தலைவி, ஜெ.,யின் வழக்கம்... பெரியகுளத்துல டீ கடை வச்சிருந்த உங்களை கூட அப்படித் தான் அரசியல்ல அடையாளப்படுத்துனாங்க. 'ஜெ., வழி வந்தவர்'னு சொல்லிக்கிற உங்களுக்கு, அந்த பரந்த மனம் இல்லாம போனது ஏன் என்ற, 'டவுட்' வருதே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Anantharaman Srinivasan
மார் 25, 2024 21:48

தரையில் இருந்து இயக்கி, விண்வெளிக்கு ராக்கெட்டை அனுப்பி இயக்கும் போது, ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் எதுவும் செய்ய முடியாதா? என்ற சீமானின் கேள்வி சிந்திக்க வேண்டிய விஷயம் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் வெளியிலிருந்து மாற்றங்கள் செய்ய முடியுமென்பதை நிருபித்து காட்ட சோதனைகளை எதிர்கட்சியினர் மேற்கொள்ள வேண்டும்,


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை