உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

காங்., மூத்த தலைவர் ப.சிதம்பரம்: நாட்டின் வளர்ச்சிக்கும், பொது சொத்துக்களை உருவாக்குவதற்கும் காங்கிரஸ் அரசு பாடுபட்டது. அதையே, தற்போது தேர்தல் வாக்குறுதியாக தந்துள்ளோம். சொத்துக்கள் உருவாக்கத்தை, பா.ஜ.,வினர் சொத்துக்கள் பகிர்ந்தளிப்பு என படிக்கின்றனர். அவர்கள், கண் டாக்டரை பார்ப்பது நல்லது.டவுட் தனபாலு: பொது சொத்துக்களை உருவாக்க, காங்கிரஸ் பாடுபட்டது உண்மை தான்... அதே நேரம், 'நாம தானே இதை உருவாக்குனோம்... அதனால, நமக்கு தான் இதெல்லாம் சொந்தம்'னு உங்க கட்சி தலைவர்கள் சிலர் நினைக்க ஆரம்பிச்சுட்டாங்களே... அதனால தானே, '2 ஜி' ஊழல், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல்னு உங்க ஆட்சியில வரிசை கட்டியது என்பதிலும், 'டவுட்'டே இல்லை!தமிழக அரசின் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா: கோடை காலத்தில், மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மின் தடை தொடர்பாக மின்னகத்தில், 24 மணி நேரமும் புகார் தரலாம். சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு தெரிவித்து, விரைந்து மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். டவுட் தனபாலு: மின்னகத்தில், 24 மணி நேரமும் புகார் தரலாம்னு சொல்றீங்க... ஆனா, அதை கேட்க தான் அங்க யாரும் இல்லை... வெகு நேரம் இசையை ஒலிக்கவிட்டு, கடைசியாக இணைப்பு துண்டிக்கப்படுது... ஏற்கனவே மின்தடையில புழுங்குற மக்கள், இதனால இன்னும் வெறுப்பாகிறாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!ஆந்திர மாநில காங்., தலைவர் ஷர்மிளா: என் அண்ணன் ஜெகன்மோகன் ரெட்டியுடன் பணியாற்றியுள்ளேன். அவரை முதல்வராக்க, 3,200 கி.மீ., பாதயாத்திரையில் பங்கேற்றுள்ளேன். ஆனால், முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்த பின் முற்றிலுமாக மாறி விட்டார். கொள்கைகளை மறந்து விட்டார்.டவுட் தனபாலு: இந்த காலத்துல, கொண்ட கொள்கையில் உறுதியாக எந்த அரசியல்வாதி இருக்காருன்னு சொல்லுங்க பார்க்கலாம்... நீங்க கூடத்தான், தெலுங்கானாவுல அரசியல் பண்ணிட்டு இருந்தீங்க... ஒரே நாள்ல காங்கிரஸ்ல சேர்ந்து, மறுநாள் அம்மாநில தலைவரா நியமிக்கப்பட்டதும், தெலுங்கானாவை கைகழுவிட்டு வந்தது மட்டும் என்ன வகை கொள்கை என்ற, 'டவுட்' எழுதே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

D.Ambujavalli
மே 08, 2024 06:37

அது பாட்டுக்கு புகார் வந்து கொண்டேதான் இருக்கும் வச்சிக்கிட்டா வஞ்சனை பண்ணுறோம் குறைகளை நிவர்த்தி செய்ய முடியாமல் போனில் திட்டு வாங்குவதை விட, போனை எடுக்காமல் இருப்பதே நல்லது என்று தீர்மானித்திருக்கலாம் கொள்கைகளை விட்டால்தான் அரசியலில் நிற்க முடியும் இது 'தங்கைக்கு' தெரியாதா ?


ramani
மே 08, 2024 06:32

பொது சொத்தாக இருந்தால்தானே நாம் சுருட்ட முடியும் இல்லைங்களா தலிவரே


முக்கிய வீடியோ