உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு: காய்த்த மரத்தில் தான் கல்லடி படும் என்பது போல, தொடர்ந்து வாய்க்கொழுப்பு எடுத்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி வருகிறார். அவரது வாய் கொழுப்பிற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர். அவரது உயரம் அவருக்கு தெரியவில்லை. தி.மு.க., திரும்ப தாக்க முயன்றால் அவர் தாங்க மாட்டார்.டவுட் தனபாலு: சாதாரணமா இருந்த சீமானை, கைது பண்ணி ஒரு கட்சியின் தலைவராக மாற்றியது கருணாநிதியின் சாதனை... இப்பவும், சீமான் மேல ஏதாவது நடவடிக்கை எடுத்தீங்க என்றால், அது அவரது அரசியல் வளர்ச்சிக்கு உரமாகவே உதவும் என்பதில், 'டவுட்'டே இல்லை!உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி: 'தமிழகத்தில் மூன்றாண்டு கால ஆட்சியில் மக்கள் பல நல்ல திட்டங்களால் பயனடைந்துள்ளனர். அதன் காரணமாக இடைத்தேர்தலில் மக்கள் தி.மு.க.,விற்கு ஓட்டளித்து அமோக வெற்றியை தந்துள்ளனர். தேர்தலுக்கு முன், தி.மு.க., விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக கவுதம சிகாமணி நியமிக்கப்பட்டார். அவரும், வேட்பாளர் சிவாவும் இணைந்து தேர்தல் பணியாற்றினர். விக்கிரவாண்டியில் சிவா பெற்றிருக்கும் வெற்றி இருவருக்குமானது. டவுட் தனபாலு: விக்கிரவாண்டியில் தி.மு.க., பெற்ற வெற்றியில், உங்க மகனுக்கு பாதி பங்கு இருக்குன்னு சொல்றீங்களே... அப்படி என்றால், முதல்வரின் மகன் உதயநிதி அங்க வந்து பிரசாரம் செய்தது எல்லாம் வெற்றிக்கு எந்த வகையிலும் உதவலையா என்ற, 'டவுட்' எழுதே!நீலகிரி தி.மு.க., - எம்.பி., ராஜா: சரியான நேரத்துக்கு சாப்பிட்டு, யோகா செய்து உடம்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள, பிரதமர் மோடி போல் உலகில் யாராலும் முடியாது. தண்ணீரே குடிக்காமல் மூன்று மணி நேரம் பேசும் மோடியை, பார்லிமென்டில் 13 முறை தண்ணீர் குடிக்க வைத்த பெருமை, முதல்வர் ஸ்டாலினையே சேரும். -டவுட் தனபாலு: பார்லிமென்ட் கதையை விடுங்க... தமிழகத்துல, முதல்வர் ஸ்டாலினை எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி தண்ணீர் குடிக்க வைக்கிறாரோ இல்லையோ... அந்த வேலையை, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கனகச்சிதமா பண்ணிட்டு இருக்காரு என்பதில், 'டவுட்'டே இல்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Vivek
ஜூலை 17, 2024 13:18

தண்ணீர் தர முடியாது என்று கர்நாடக சொல்ல, அடை மழை பொழிய அதே நேரத்தில் இரண்டு மாநிலங்களும் அனைத்து கட்சிகள் கூட்டம் போட , தமிழகம் கடிதம் எழுதி அடை மழையால் வந்த வெள்ளநீரை வடிகாலாக திறந்து விட, இது ஆண்டுதோறும் வாடிக்கை ஆகி விட்டது. ஆக மேலாண்மை குழு கூற தண்ணீர் திறந்து விடவில்லை அடைமழையால் வெள்ள நீரை வடிகாலாக திறந்து விடுகிறது கர்நாடகம்.


s chandrasekar
ஜூலை 16, 2024 21:02

காவிரி தண்ணீர் தமிழ்நாட்டுக்கு கானல்நீர் . கர்நாடக மக்கள் என்ன விவரம் theriyathavana


D.Ambujavalli
ஜூலை 16, 2024 16:45

இந்த அற்ப இடைத்தேர்தலுக்கு 30 அமைச்சர்கள், நிர்வாகிகள் இத்தனை பேர் கூடி கோடி கோடியாக வாரியிறைத்து 'வாங்கிய' வெற்றிக்கு, 'கப்பல் பாக்கில் கால் பாக்கு என் பங்கு' என்று இவர் மகனை நுழைக்கிறாரே இதுதாங்க ராஜ தந்திரம் ……. இல்லை. மஹா ராஜ தந்திரம்


Dharmavaan
ஜூலை 16, 2024 07:36

அதிகம் பேசவிடாமல் அவை தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்


sankaranarayanan
ஜூலை 16, 2024 00:40

என்னய்யா எல்லாரும் தண்ணீர் தண்ணீர் என்கிறார்களே என்ன தண்ணீர் இது டாஸ்மார்க் தண்ணீரா அல்லது கள்ளக்குறிச்சி தண்ணீரா அல்லது காவேரி தண்ணீரா எல்லாமே ஒன்றாகி விடுமா


A Viswanathan
ஜூலை 16, 2024 08:08

மக்கள் சிந்திக்க தொடங்கி விட்டால் பிறகு இவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும்.


சமீபத்திய செய்தி