உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றவாளிகள் யாரும் தப்பிவிடக்கூடாது என தற்போதைய சென்னை கமிஷனர் அருணை சந்தித்து வலியுறுத்தினேன். தொடர்ந்து, முதல்வரை சந்தித்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு புலன் விசாரணையை நேர்மையாக நடத்த, அரசு அனைத்து முயற்சிகளையும் எடுக்க வலியுறுத்தினேன். ஆம்ஸ்ட்ராங் கொலையில் நேரடியாக ஈடுபட்ட குற்றவாளி மீது போலீஸ் என்கவுன்டர் நடவடிக்கை எடுத்திருப்பது, அதிர்ச்சி அளிப்பதாக இருந்தாலும், ஆறுதல் அளிக்கிறது.டவுட் தனபாலு: பொதுவாகவே, போலீசாரின் என்கவுன்டர்களை, 'செட்டப்' என்று தான் பலரும் சொல்வாங்க... அதுலயும் நீங்க முதல்வரையும், சென்னை கமிஷனரையும் பார்த்துட்டு வந்த பிறகு இந்த என்கவுன்டர் நடந்திருப்பது, அந்த புகார்களை உறுதிப்படுத்துகிறது என்பதில், 'டவுட்'டே இல்லை!பத்திரிகை செய்தி: 'சண்டாளர்' என்ற ஜாதி பெயரை பயன்படுத்த, தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் தடை விதித்துள்ளது. மீறி பயன்படுத்துவோர் மீது, எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை சட்டத்தில் நடவடிக்கை எடுக்கவும், அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.டவுட் தனபாலு: 'சண்டாளர்' என்பது ஜாதி பெயர் என்றால், இதுவரை அதை பயன்படுத்தி வந்த சினிமா பாடல்கள், அரசியல் தலைவர்களின் அறிக்கைகள் வெளியானப்ப, ஆணையம் எங்க போயிருந்தது...? இப்ப, சீமான் தரப்பு இந்த பெயரை பயன்படுத்தி, முன்னாள் முதல்வரை விமர்சித்த பின்தான், ஆணையத்தின் துாக்கம் கலைந்ததா என்ற, 'டவுட்' வருதே!தமிழக முதல்வர் ஸ்டாலின்: காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவின்படி, 1 டி.எம்.சி., நீரை விடுவிக்காத கர்நாடக அரசின் செயல், உச்ச நீதிமன்றத்தின் ஆணையை மீறுவதாகும். கர்நாடகாவின் நான்கு முக்கிய அணைகளின் நீர் இருப்பு, 75 டி.எம்.சி.,யாகும். மேட்டூர் அணையில் வெறும் 14 டி.எம்.சி., அளவிற்கு மட்டுமே நீர் உள்ளது. இந்தச் சூழலில், நீர் வழங்க முடியாது என, கர்நாடக அரசு கூறுவது, வன்மையாக கண்டிக்கத்தக்கது.டவுட் தனபாலு: 'மத்தியில் தான் பா.ஜ., அரசு இருக்குது, மாநிலத்தை வஞ்சிக்குது' என்ற உங்க கருத்தைக் கூட ஏத்துக்கலாம்... ஆனா, கர்நாடகாவில் உங்க கூட்டணி கட்சியான காங்கிரஸ் தானே ஆட்சியில் உள்ளது... சோனியா, ராகுலுக்கு ஒரு போன் அடிச்சு, பிரச்னையை தீர்க்காதது ஏன் என்ற, 'டவுட்' எழுதே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

பேசும் தமிழன்
ஜூலை 18, 2024 07:49

அதெப்படி போன் போடுவார்.... அவருக்கு இந்தி கூட்டணி தான் முக்கியம்..... அப்படியே போன் போட்டாலும் ராகுல் மற்றும் சோனியா.... தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட வலியுறுத்த வேண்டும் மாட்டார்கள்..... அவர்களுக்கு கர்நாடகா தான் முக்கியம்.... அவர்கள் ஓட்டு போட மாட்டார்கள்.... அவர்கள் தமிழர்களை போல் இளிச்சவாயர்கள் இல்லை.... தமிழன் எதை செய்தாலும் ஓட்டு போட்டு விடுவான் என்று அவர்களுக்கு தெரியும்..... இல்லையென்றால் ஈழத்தில் இலட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவிக்க காரணமாக இருந்த அந்த கட்சி கூட்டணிக்கு ஓட்டு போடுவார்களா ???


TIRUPUR MAYILVAGANAN SIVAKUMAR
ஜூலை 17, 2024 20:38

அதான் கர்நாடகாவில் கனமழை காரணமாக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட்டு இரண்டுநாட்களாக செய்தி வந்துகொண்டிருக்கிறது போரவு எதுக்கு சவடால்? விட்டுகொண்டிருக்காங்க? தமிழ் நாட்டு மக்களை இன்னும் பைத்தியங்களாகவே நினைத்து கொண்டு இருக்கிறார்கள்.ஜனங்களுக்கும் இது தேவைதான்,


Anantharaman Srinivasan
ஜூலை 17, 2024 20:33

காவிரி விவகாரத்தில் சோனியாவும், ராகுலும் பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் கதையாகத்தான் நடந்து கொள்வார்கள். அவங்களுக்கு கர்நாடக காங்கிரசும் வேண்டும் தமிழ்நாடு கூட்டணியும் வேண்டும்.


D.Ambujavalli
ஜூலை 17, 2024 16:36

அந்தப்பாட்டு கூட என்றோ அதிமுகவுக்காக தேர்தலுக்கு எழுதி, பாடி முடித்த ஒன்றுதான் அப்போது கலைஞரும் உயிருடன் இருந்தார் அப்போது இந்த சொற்களெல்லாம் லிஸ்டில் இல்லையா? எஸ். சி. /எஸ் t பட்டியலில் இந்த பெயர் உள்ளதா அன்றி இன்றுதான் இணைந்துள்ளதா ? இனி இந்தச் சொல் பிரயோகிக்கப்பட்ட படங்கள், சீரியல்கள் எல்லாவற்றையும் தேடி கேஸ் போடும் பெரிய project ஐ அரசு எடுக்கும். மக்கள் பிரச்னைகள் பரணில் அமர்ந்து விடும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை