உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகம்: நெல்லை காங்., தலைவர் ஜெயக்குமார் கொலையில் தமிழக போலீசார் என்ன விசாரித்தனர்; என்ன நடவடிக்கை எடுத்தனர் என, யாருக்கும் தெரியாது. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிப்பதற்கு அச்சம்பவமும் ஒரு உதாரணம். ஆனால், தி.மு.க., கூட்டணி கட்சி தலைவர்களுக்கு அது குறித்தெல்லாம் எந்த கவலையும் இல்லை.டவுட் தனபாலு: 'கூட்டணி கனவு கைகூடாமல் லோக்சபா தேர்தலில் தான் மண்ணை கவ்வினோம்... அடுத்தடுத்த தேர்தலுக்காச்சும் மாற்றம் வரும்'னு உங்க பொதுச்செயலர் காத்துட்டு இருக்கார்... அதுக்கான காலமும்,நேரமும் இப்ப கைகூடி வரும் நிலையில், ஏடாகூடமா யாரையும் விமர்சித்து, அவரோட கனவுல மண்ணை அள்ளி போட்ருவீங்களோ என்ற 'டவுட்' தான் வருது!தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி: தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ள அளவுக்கு எந்த சம்பவங்களும் நடக்கவில்லை. மக்கள் தொகை 8 கோடியாக அதிகரித்துள்ளது. அந்த வகையில் குற்ற சம்பவங்கள் எண்ணிக்கை கூடும்; குறையும். முன்விரோதம் காரணமாக நடைபெறும் கொலைகளுக்கு அரசு எந்த வகையிலும் பொறுப்பாக முடியாது.டவுட் தனபாலு: 'தமிழகத்தில்என்ன நடந்தால் எங்களுக்கென்ன'ன்னு வாய்மூடிமவுனிகளாக இருந்த உங்க கூட்டணி கட்சிகள் இப்ப சட்டம் - ஒழுங்கு நிலை பற்றி மெல்ல வாய் திறக்க ஆரம்பிச்சிருக்காங்க... ஆரம்பத்துலயே அவங்க வாயை அடைக்க தான் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு பதில் சொல்ற மாதிரி, இப்படி கொதிச்சிருக்கீங்க என்பதில் 'டவுட்'டே இல்லை!தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: தமிழகத்தில் குற்ற சம்பவங்களும், சட்டம் - ஒழுங்கு சீர்கேடுகளும், தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சிறைகளில் கைதிகள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. போதிய இடம் இல்லாமல், ஒரே அறையில் அதிகமான கைதிகளை அடைத்து, மனித உரிமை மீறலும் நடக்கிறது. தற்போதுள்ள சிறைச்சாலைகளை முறையாக பராமரிக்காமல்,சிறைகளை மூட முடிவுசெய்துள்ள நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும்.டவுட் தனபாலு: அதிகரித்து வரும் குற்ற சம்பவங்களால், தமிழகத்தில் தாலுகாவுக்கு ஒரு ஜெயில் தேவைப்படுற நிலையில், இப்ப இருக்கிற ஜெயிலையும் மூடும் அரசின் முடிவு பல்வேறு சிக்கல்களுக்கு தான் வழிவகுக்கும் என்பதில் 'டவுட்'டே இல்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Anantharaman Srinivasan
ஜூலை 31, 2024 20:57

ஆங்காங்கே சிறைச்சாலைகளை மூடினால்தான் கைதிகளின் எண்ணிக்கையை மறைக்க முடியும்.


D.Ambujavalli
ஜூலை 31, 2024 16:50

இன்னும் இந்த 8 கோடியில் இரண்டு மூன்று கோடியாவது கொலை, கொள்ளை கற்பழிப்பு குற்றங்களுக்கு ஆளாகி அழிந்தாலாவது சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று ஒத்துக்கொள்வாரா ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை