உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

தமிழக சிறு, குறு, நடுத்தரதொழில் துறை அமைச்சர்அன்பரசன்: தங்களுக்கு சிறு அளவில் கூட்டம் கூடியதும், நடிகர்கள் முதல்வராக ஆசைப்படுகின்றனர். அதற்காக கட்சி துவங்குகின்றனர். இப்படித்தான், எம்.ஜி.ஆரும், பின் ஜெயலலிதாவும் அரசியலுக்கு வந்தனர். அவர்களுக்கு பின், அரசியலுக்கு வந்த எந்த நடிகரும் சோபிக்கவில்லை. அரசியலில் அவர்கள் ஏன் தோற்கின்றனர் என யோசித்தால், ஒரு உண்மை புரியும். அவர்களுக்கு போதுமான அளவுக்கு அரசியல் அறிவு இருப்பதில்லை என்பதுதான்.டவுட் தனபாலு: இப்போதைக்குஅரசியல் கட்சி துவங்கி இருப்பதுநடிகர் விஜய் தான்... அவர் இன்னும் களத்துக்கே வரலை... அதுக்குள்ள உங்களுக்கு குளிர் ஜுரம் வந்துடுச்சு என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!பா.ம.க., தலைவர் அன்புமணி: தமிழகத்தில் முதியோர் ஓய்வூதியம் 1,200 ரூபாய் மட்டுமே.ஆனால், ஆந்திராவில் 4,000 ரூபாய் வழங்கப்படுகிறது. தமிழகத்தில், சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு அரசு செலவழிக்கும் தொகை, 5,337 கோடி ரூபாய் தான். இந்த திட்டங்களுக்காக, ஆந்திராவில் நடப்பாண்டுக்கு, 33,100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சமூக பாதுகாப்புத் திட்டங்களை செயல்படுத்துவதில், ஆந்திர அரசை பார்த்து, தமிழக அரசு கற்றுக்கொள்ள வேண்டும்.டவுட் தனபாலு: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தே.ஜ., கூட்டணியில இருக்காரு... அவரது மாநிலத்துக்கு மத்திய அரசு நிதியை வாரி வாரி வழங்குது... நம்ம மாநிலத்துக்கு அப்படிஇல்லையே... நீங்களும் தே.ஜ., கூட்டணியில் தானே இருக்கீங்க... பிரதமரிடம் பேசி, தமிழகத்துக்கு கூடுதல் நிதியை வாங்கி தந்துட்டு, குறை சொன்னால், 'டவுட்'டே இல்லாமஉங்களை பாராட்டலாம்.அ.தி.மு.க., பொதுச்செயலர்பழனிசாமி: தலைநகர் சென்னை யின் மையப் பகுதியில் மருத்துவமனை, ரயில்வே ஸ்டேஷன், தலைமை செயலகம், துறைமுகம் உள்ளன. போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதியில் கார் பந்தயம் நடத்த வேண்டுமா என, இந்த அரசு சிந்தித்து பார்க்க வேண்டும். எப்படி எல்லாம் நம் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது; இது கண்டிக்கத்தக்கது. டவுட் தனபாலு: சென்னையின் மையப் பகுதியில் கார் பந்தயம்நடப்பதை எதிர்த்து சட்ட போராட்டம் நடத்துற உங்க கட்சி, மக்கள் மன்றத்துலயும் போராட்டத்தை துவங்கினால் தான், ஆளுங்கட்சி அசைந்து கொடுக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

D.Ambujavalli
ஆக 13, 2024 16:49

ஊர்க்குருவி பருந்தாகாதுதான் ஆனாலும் வாக்குகள் சிதறிப்போகலாம் விஜய்க்கென்று உள்ள ரசிகர்களில் உங்கள் கட்சியில் உள்ளவர்களும் திசை மாறலாம் அந்தப் பதற்றம் உங்கள் சொற்களில் தெரிகிறது சரி, முதல்வர் மகன் திரைத்துறையிலிருந்து வந்து அமைச்சராகி, நாளை துணை, மறுநாள் முதல்வர் என்றால் மட்டும் அதைத் தாங்கிக்கொள்ள முடியும்


Anantharaman Srinivasan
ஆக 13, 2024 14:52

MGR எந்தளவுக்கு அரசியல் ஞானமுள்ளவராகயிருந்தாரென்பது உலக பிரசித்தம். சினிமா கவர்ச்சியில் கட்சி வளர்ந்தது என்பதேஉண்மை.


Arul Narayanan
ஆக 13, 2024 14:22

ஆந்திராவில் ஜெகன் மோகன் காலத்தில் இருந்தே 4000 ரூபாய் முதியோர் உதவித்தொகையும் மற்ற தாராள இலவசங்களும் உள்ளன. மத்திய அரசு புதிதாக எதுவும் அள்ளிக் கொடுக்கவில்லை.


TIRUPUR MAYILVAGANAN SIVAKUMAR
ஆக 13, 2024 10:41

M.G.R.என்ற மாபெரும் சக்தியை வைத்துதான் தி.மூ.க வே வளர்ந்து என்று அதை உருவாக்கிய பேரறிஞர் அண்ணா அவர்கள்லே சொல்லியுள்ள வரலாறு இவருக்கு தெரியவில்லை போல, ஒழுங்காக முழுதும் படித்து பார்த்துவிட்டு பேசவேண்டும் அதை விட்டுவிட்டு கருணாநிதி தான் கழகத்தை உருவாக்கினார் என்ற அளவிற்கு அதிகமாக கதை வசனம் எல்லாம் இவர் பேசவேண்டாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை