உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு: தி.மு.க., எத்தனை கட்சியோடுகூட்டணி வைத்தால் என்ன; மக்கள் ஓட்டளிக்க தயாராக இல்லை. ஏற்கனவே, தமிழக அரசியல் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்றே இருந்தது. மக்களும், மூன்று தலைவர்களுக்குமாக ஓட்டளித்தனர். இப்போது, அந்த நிலை மாறி, ஸ்டாலினா, பழனிசாமியா என பார்க்கின்றனர். இருதரப்புக்குமாகத்தான் ஓட்டளிப்பர். அதனால், மற்றவர்களுக்கு இங்கு வேலை இல்லை.டவுட் தனபாலு: 'நினைப்புதான் பிழைப்பை கெடுக்கும்'னு கிராமங்கள்ல சொல்லுவாங்க... தமிழகத்துல தி.மு.க.,வுக்கும், பா.ஜ.,வுக்கும் இடையில் நடக்கிற மொழிப் போராட்டத்தை பார்த்தால், 2026 சட்டசபை தேர்தல் களம், ஸ்டாலினா, அண்ணாமலையா என்று தடம் மாறிப் போகுதோ என்ற 'டவுட்' இவருக்கு வரலையா?பத்திரிகை செய்தி: விருதுநகரில் நடந்த அ.தி.மு.க., பொதுக்கூட்டத்தில் சால்வை அணிவிக்க, வரிசையில் வராமல் குறுக்கே புகுந்து வந்த எம்.ஜி.ஆர்., மன்ற ஒன்றிய துணை செயலர் நந்தகுமாரை, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கன்னத்தில் அறைந்தது, கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.டவுட் தனபாலு: இதே ஜெ., இருந்திருந்தால், என்ன நடந்திருக்கும்...? அறைஞ்ச ராஜேந்திர பாலாஜியின் கட்சிப்பதவி பறிக்கப்பட்டு, கடைக்கோடி தொண்டராகியிருப்பாரு... அவரிடம் அடி வாங்கியவர், மாவட்ட செயலர் பதவிக்கு வந்திருப்பாரு... ஆனா, பழனிசாமி நிர்வாகத்துல இதெல்லாம் நடக்குமா என்பது, 'டவுட்'தான்!பொள்ளாச்சி தொகுதி தி.மு.க., - எம்.பி., ஈஸ்வரசாமி: தமிழகத்தை பொறுத்தவரை, இருமொழிக் கொள்கையை தொடர்ந்து கடைப்பிடிக்க வலியுறுத்தப்படுகிறது. ஆனாலும், ஹிந்தி மொழியை கற்றுக்கொள்வதில் தவறில்லை. அதை கட்டாயப்படுத்தி திணிக்கும் போதுதான் எதிர்க்கின்றனர். தமிழ் மொழியை ஒழிக்கவே, மத்திய அரசு மூன்றாவது மொழியாக ஹிந்தியை திணிக்கிறது. ஹிந்தி திணிப்பை தொடர்ந்து எதிர்ப்போம். டவுட் தனபாலு: மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை தான் வலியுறுத்துது... எந்த இடத்துலயும், மூணாவது மொழியா ஹிந்தி படிக்கணும்னு சொல்லவே இல்லை... 'அரண்டவன்கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்'னு சொல்ற மாதிரி, உங்களது காமாலை கண்ணுக்கு தான் அது, ஹிந்தியா தெரியுது என்பதில், 'டவுட்'டே இல்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

RAM MADINA
மார் 09, 2025 10:00

இந்தி திணிப்பு இல்லைனா இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க 150 பசங்க படிக்கற பள்ளியில 15 மொழி படிக்க பசங்க விருப்ப படறாங்கனு வைங்க 15 டீச்சர் போடுவீங்களா, பட்ஜெட் ஆள் பற்றாக்குறை னு சொல்லி ஒரு மொழி படிக்க சொல்லுவிங்களா?


Yes your honor
மார் 09, 2025 10:44

இதற்குத்தான் உங்களையெல்லாம் படிங்கடா, படிங்கடா என்று எல்லோரும் கூறுவது. அண்ணாமலை பலமுறை இந்த அறிவு குறைந்த கேள்விகளுக்கு பதிலளித்து சலித்துவிட்டார். தயவுசெய்து அண்ணாமலைஜியின் இது குறித்த பேட்டிகளை ஹேங்கோவர் இல்லாத நேரத்தில் பார்க்கவும். இது படிப்பு சம்மந்தமான விஷயம், அநேகமாக உங்களுக்கெல்லாம் புரியறது கஷ்டம்.


Suppan
மார் 09, 2025 11:43

பெரும்பான்மை மாணவர்கள் எந்த மொழிகளை விரும்புகிறார்களோ அந்த மொழிகளுக்குத்தான் ஆசிரியர்களை நியமிப்பார்கள். இதிலென்ன தவறு.


D.Ambujavalli
மார் 09, 2025 06:05

‘ தொண்டரை ஏன் அறைந்தீர்கள் ‘ என்று கேட்கப்போய், அதுதான் சாக்கு என்று கழற்றிக்கொண்டு ஓடிவிடுவாரோ என்று இருப்பவர் அவர் கட்டிப்பார் என்றெல்லாம் எதிர்பார்க்கலாமா ?


கிஜன்
மார் 09, 2025 03:08

என்னது ஸ்டாலினா ....அண்ணாமலையாவா ..... ஆண்டவா .... 2026 வரை இதே நினைப்பு இவர்களுக்கு இருக்கட்டும் .... திமுக அப்பத்தான் ஈசியாக ஜெயிக்கும் ....


Yes your honor
மார் 09, 2025 08:50

கிஜன், நீங்கள் ஒன்று செய்யுங்கள். நேராக அறிவாலயம் சென்று அப்பா, மகன், மருமகன், கண்ணீர்மொழி, இன்னும் பல பெரிய சைஸ் பெருச்சாளிகள் எல்லாம் ஒன்றாக அமர்ந்திருக்கும் போது அங்குசென்று, அனைவர் காதிலும் படும்படி, அண்ணாமலை வருகிறார் என்று ஒரேஒருமுறை சத்தமாக சொல்லிப் பாருங்கள். அதைக்கேட்டதும், எத்தனை பேர் பேண்ட் நனைகிறது, எத்தனை பேருக்கு ஹேங்கோவர் தெளியுது, எத்தனை பேருக்கு அவசரமாக வயிறு ஒருமாதிரி ஆகுது என்று பிறகு பதிவிடுங்கள். குற்றவாளிகளுக்கு எப்பொழுதுமே போலிஸைக் கண்டால் பயமாகத் தான் இருக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை