உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டவுட் தனபாலு / ‘டவுட்’ தனபாலு: நவ. 7

‘டவுட்’ தனபாலு: நவ. 7

த.வெ.க., கூட்டணியில் இருக்கும் வி.சி.க.,வைச் சேர்ந்த, தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு: ‘அம்பாசமுத்திரம் தொகுதி பொது வேட்பாளர்’ என, தன்னையே நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சொல்லி கொள்கிறார். அன்று, ‘திராவிட கோட்டையை இடிப்பேன்’ என்றார். இன்று, திராவிட கடப்பாரையை எடுத்து, தமிழ் தேசிய கோட்டையை இடிக்க கிளம்பியுள்ளார். திராவிட பிரியாணிக்காக தட்டேந்தி நிற்கும் சீமான், திராவிடத்திடம் மண்டியிட்டு கிடக்கிறார். டவுட் தனபாலு: அது சரி... திராவிட கட்சிகளுடன் தான் உங்க கட்சி, 20 வருஷங்களுக்கும் மேலா கூட்டணியில் இருந்துச்சு என்பதை மறந்துட்டீங்களா... அவ்வளவு ஏன்... இப்ப நீங்க அமைச்சராக காரணமான எம்.எல்.ஏ., பதவியே, தி.மு.க., கூட்டணியில் நின்று ஜெயித்தது தான் என்பதையும் சேர்த்தே மறந்துட்டீங்களோ என்ற, ‘டவுட்’ வருதே! lll பத்திரிகை செய்தி: தி.மு.க.,வில் அமைப்பு ரீதியாக உள்ள 77 மாவட்டங்களை, 110 ஆக அதிகரித்து மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி சிபாரிசால், இளைஞரணியை சேர்ந்த பலருக்கும் மாவட்டச் செயலர் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. அதேநேரம், துணை பொதுச்செயலர் கனிமொழி வசம் உள்ள மகளிரணியினரும், ‘குறைந்தபட்சம் 10 பேருக்கு மாவட்டச் செயலர் பதவி தர வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளனர். டவுட் தனபாலு: பெண்கள் ஓட்டுகளால தான், த.வெ.க., ஆட்சியை பிடிச்சிருக்கு என்பது தான், ‘டவுட்’ இல்லாத உண்மை... அந்த வகையில், மகளிர் ஓட்டுகளை வாங்கணும் என்றால், தி.மு.க., நிர்வாகத்தில், அவங்களுக்கும் அதிகாரத்தை பகிர்ந்து வழங்கணும் என்பதிலும், ‘டவுட்’டே இல்லை! lll விஷ்வ ஹிந்து பரிஷத் தமிழக மாநில அமைப்பாளர் செந்தில்குமார்: திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோவிலில், தங்க ரதம் இழுக்கும் கட்டணம் 2,000த்தில் இருந்து, 2,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. தி.மு.க., ஆட்சியில் கூட இதுபோன்று கட்டணம் உயர்த்தப்படவில்லை. இதனால், சாமானிய பக்தர்களால் நேர்த்திக்கடனை நிறைவேற்ற முடியாமல் போகும். முதல்வர் விஜய் தலையிட்டு, கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். டவுட் தனபாலு: தங்க ரதம் என்றால் பணக்காரர்கள் மட்டும் தான் இழுப்பாங்கன்னு, அறநிலையத் துறை அதிகாரிகள் முடிவு பண்ணிட்டாங்களா...? எத்தனையோ ஏழைகளும், நேர்த்திக்கடனுக்காக தங்க ரதம் இழுப்பாங்க என்பதை உணர்ந்து, கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கணும் என்பதில், ‘டவுட்’டே இல்லை! lll


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

duruvasar
நவ 08, 2026 13:29

ஓசியில் ஜெயித்தவர்க்கு மேல் மற்றும் கீழே வாய் என இரண்டிலும் கொழுப்பு கூடுதலாக இருக்கிறது என்பதில் எந்த டவுட்டும் இல்லை.


D.Ambujavalli
நவ 07, 2026 20:00

சமயம் பார்த்து. தங்கையும். சந்திலே. சிந்து. பாட. ஆரம்பித்துவிட்டாரே


Anantharaman Srinivasan
நவ 07, 2026 19:20

தங்கம் விலை மட்டும் தாறுமாறா ஏறும் போது நாங்களும் தங்க ரதம் காணிக்கை கட்டணத்தை 500 ரூ ஏத்தினால் என்ன என்று பழனி கோவில் நிர்வாகம் நினைத்திருக்கும்.


Haja Kutbudeen
நவ 07, 2026 08:19

ஆயுள் தண்டனை கைதிகளை எல்லாம் அமைச்சர் ஆக்கினால் இப்படிதான்


சமீபத்திய செய்தி