உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகளான நடிகை மதுவந்தி: முன்னாள் ராணுவ அதிகாரி முகுந்த் வரதராஜனின் தேச பக்திமற்றும் அவருடைய செயல்பாடுகளை வைத்து, அமரன் என்றதிரைப்படம் எடுத்துள்ளனர். அதை யாரும் குறை சொல்லவில்லை; வரவேற்கிறோம். ஆனால்,படத்தின் முக்கிய கதாபாத்திரமான முகுந்த் வரதராஜன், பிராமணர் சமூகத்தைச் சேர்ந்தவர் என, எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. இது தான் சமூக நீதியா? டவுட் தனபாலு: அந்த படத்தைதயாரித்தவர் கமல்ஹாசன்... அவர், திராவிட மாடல் பேசும் தி.மு.க., கூட்டணியில் இருக்கார்...தான் சார்ந்த பிராமணர்சமுதாயத்தை உயர்த்தி பிடிச்சா, தனக்கு, 'ரிசர்வ்' செய்து வைத்துள்ள ராஜ்யசபா எம்.பி.,சீட்டுக்கு வேட்டு வந்துடுமோன்னு பயந்து, வரலாற்றை மறைச்சுட்டாரோ என்ற, 'டவுட்' தான் வருது!அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்: தி.மு.க., ஆட்சியில் வளர்ச்சி திட்டங்கள் ஒன்றும் இல்லை. அ.தி.மு.க., ஆட்சி காலத்தில்சிறப்பாக செயல்படுத்தப்பட்ட பல திட்டங்களையும் முடக்கியதுதான், அவர்களின் சாதனை. கஞ்சா, கள்ளச்சாராயம், போதைப்பொருட்களின் நடமாட்டம் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல்இருக்கிறது.டவுட் தனபாலு: 'குட்கா' மொத்தவியாபாரிகளிடம் மாதாந்திர மாமூல் வாங்கியது தொடர்பாக, உங்க கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் சிலர் மீது வழக்குகள்இருப்பதை மறந்துட்டு, தி.மு.க., ஆட்சி மீது குற்றம் சொல்றீங்களோஎன்ற, 'டவுட்' தான் வருது!தமிழக பா.ஜ., ஒருங்கிணைப்புகுழு தலைவர் எச்.ராஜா: நாளை, தஞ்சையில் நடக்கும்கட்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் துணை முதல்வர்உதயநிதி பங்கேற்க இருப்பதாகதகவல் வெளியாகியுள்ளது.அவரை வரவேற்பதற்காக விளம்பரம் செய்ய திட்டமிட்டு, அதற்காக, கோவில் பணத்தில்இருந்து செலவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அவருக்கு, கோவில் நிதியில் இருந்து 1 ரூபாய் கூட, செலவு செய்யக்கூடாது. டவுட் தனபாலு: நீங்கசொல்றது சரி தான்... 'கோவில்கள்மீதும், ஹிந்து கடவுள்கள் மீதும்எனக்கு நம்பிக்கையில்லை... அதனால, அந்த நம்பிக்கையுள்ளபக்தர்கள் தந்த காணிக்கை பணத்தில் இருந்து, எனக்கு எந்த வரவேற்பு விளம்பரமும் செய்யக்கூடாது'ன்னு உதயநிதியேமுன்வந்து அறிவிச்சுட்டா, 'டவுட்'டே இல்லாம அவரை பாராட்டலாம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

sankaranarayanan
நவ 06, 2024 20:47

மதுவந்தி அவர்கள் கூறியது முற்றிலும் தமிழ் நாட்டில் நடப்பது நடந்து கொண்டிருப்பது உண்மை உண்மை உண்மை ஏன் பாரதியார் - உ வே சா - வாஞ்சிநாதன் - மதுரை கோயிலில் தீண்டாமை ஒழிக்க தலித் மக்களை தன்னுடன் அழைத்து சென்றவரை - கணித மேதை இராமானுஜரை - இன்னும் ஏராளம் ஏராளம் பிராமணர்களின் தமிழுக்காக செய்த அர்ப்பணிப்புகளை அறவே ஒழித்து மக்களிடம் காட்டாதது யார் யாருடைய வேலைகள் ஏன் அவைகளை மூடி மறைக்க வேண்டும்


NAGARAJAN
நவ 06, 2024 20:18

இந்த மதுவந்தி மாதிரியானவர்களை ஜெயிலில் போட வேண்டும். ‌


Anantharaman Srinivasan
நவ 06, 2024 13:59

தான் பிறந்த பிராமணஜாதியை வெளியில் சொல்லிக்கொள்ள வக்கில்லாத கமலஹாசனுக்கு பணம் பண்ணமட்டும் பிராமணர் ஜாதி கதை தேவைபடுகிறது.


கிஜன்
நவ 06, 2024 03:20

மதுவந்தியின் ஆதங்கம் நியாயமானது .... ஜாதியை உயர்த்திப்பிடிக்கும் ஒரு மாநிலத்தில் .... அவர் பெருமைப்படுவதில் தவறில்லை ... இதே அநியாயத்தைத்தான் சூரரைப்போற்று படத்தில் கேப்டன்.கோபிநாத்தை .... சூர்யா வேறு ஒரு ஜாதிக்காரராக காட்டினார் .... எந்த கிரெடிட்டும் பிராமணர்களுக்கு செல்லக்கூடாது என்பதில் திரையுலகம் தெளிவாக இருப்பது மிக கண்டிக்கத்தக்கது ...


முக்கிய வீடியோ