முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம்: இரண்டு முறை முதல்வர் பதவியில், ஜெயலலிதா என்னை தான் நியமனம் செய்தார். பழனிசாமி ஆட்சியில், துணை முதல்வர் பதவி, 'டம்மி' என்பதால் வேண்டாம் என்றேன். இருப்பினும், வலுக்கட்டாயமாக பதவி ஏற்க வைத்தனர்.டவுட் தனபாலு: ஆரம்பத்துலயே அவங்க, உங்களை டம்மியாக்க தான் முடிவு பண்ணியிருக்காங்க... 'ரெண்டு முறை முதல்வர் சீட்ல அமர்ந்த நான் டம்மியான துணை முதல்வர் பதவியில அமர மாட்டேன்'னு சொல்ல விடாம, உங்களை தடுத்தது எது என்ற, 'டவுட்'டுக்கு விளக்கம் தர முடியுமா?தமிழக முதல்வர் ஸ்டாலின்: தமிழகத்திற்கு, 37,907 கோடி ரூபாய் வெள்ள நிவாரண நிதியை விரைந்து வழங்க வலியுறுத்தி, அனைத்து கட்சி எம்.பி.,க்கள் குழுவினர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க நேரம் கேட்கப்பட்டு உள்ளது.டவுட் தனபாலு: முதல்ல, நீங்க 5,௦௦௦ கோடி ரூபாய் கேட்டதுக்கே இன்னும் விடை தெரியலை... இப்படி, தடாலடியா 37 ஆயிரத்து சொச்சம் கோடியை கேட்டா, அவங்களால கண்டிப்பா தர முடியாது... 'தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து விட்டது'ன்னு லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்கு இதை பயன்படுத்துவீங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: 'மிக்ஜாம்' புயல் மற்றும் கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள வட மாவட்டங்கள் மற்றும் கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களை சேர்ந்த அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரொக்கமாக 5,000 ரூபாய் வழங்க வேண்டும்.டவுட் தனபாலு: ஆட்சியாளர்கள் வழங்க மாட்டாங்கன்னு துணிஞ்சு கேட்கிறாரோ...? தப்பி தவறி, 5,௦௦௦ ரூபாய் நிவாரணம் குடுத்துட்டா, லோக்சபா தேர்தல்ல இந்த மாவட்ட மக்களின் ஓட்டுகள் ஆளுங்கட்சிக்கு விழுந்து, அ.தி.மு.க.,வுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை யோசிக்க மறந்துட்டாரோ என்ற, 'டவுட்'தான் வருது!தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி:டில்லியில் சகோதரர் ராகுலை மரியாதை நிமித்தமாகசந்தித்து பேசினேன். ஒருவரையொருவர் நலம் விசாரித்துக் கொண்டோம். அப்போது, வரும் லோக்சபா தேர்தல் குறித்து அவர் பேசினார். என்ன பேசினார் என்பதை இப்போது கூற முடியாது. டவுட் தனபாலு: என்னத்த பேசியிருக்க போறாரு... 'தமிழகத்துல காங்., கட்சிக்கு சீட்களை கூடுதலா போட்டு குடுங்க'ன்னு கொக்கி போட்டிருப்பாரு... நீங்களும், 'அதை எங்க கட்சி தலைவர்கள் முடிவு பண்ணுவாங்க'ன்னு நாசுக்கா நழுவிட்டு வந்திருப்பீங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்: இரண்டு ஆண்டுகளாக மதுபான கொள்கை ஊழல் வழக்கை அமலாக்கத் துறை விசாரிக்கிறது. லோக்சபா தேர்தல் நெருங்கும் நேரத்தில், என்னிடம் விசாரிக்க வேண்டும் என்கின்றனர். மக்களிடம் எனக்கு உள்ள நற்பெயரை சீர்குலைக்கவும், லோக்சபா தேர்தலில் பிரசாரம் செய்ய விடாமல் தடுக்கவும், கைது செய்ய முயற்சிக்கின்றனர். நேர்மை தான் என்னுடைய மிகப் பெரிய சொத்து.டவுட் தனபாலு: டில்லியில நீங்க வசிக்கிற அரசு பங்களாவை, அப்பாவி மக்களின் வரிப்பணம் 45 கோடி ரூபாயில புதுப்பிச்சப்பவே, உங்க நேர்மை பல் இளிச்சிடுச்சு என்பதில், 'டவுட்'டே இல்லை!தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்: அரசு போக்குவரத்து துறை சிறப்பாக செயல்படுவதற்கு, முதல்வர் வழங்கும் நிதி தான் காரணம். டீசல் மானியம், மகளிருக்கு கட்டணமில்லா பயணம், மாணவர்களுக்கு இலவச பாஸ் போன்றவற்றுக்கு அரசு வழங்கும் நிதி வாயிலாகவே, போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. டவுட் தனபாலு: அரசு தான் தாராளமா நிதி வழங்குதுன்னு சொல்றீங்களே... அப்படியும், போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்துல ஓடுவது ஏன்...? நிர்வாகம் பண்றவங்க சரியில்லையோ என்ற, 'டவுட்'தான் வருது!