உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

பா.ஜ., உறுப்பினர் நடிகர் சரத்குமார்: எந்த பேருதவியும் இல்லாமல், நான் நடித்து ஈட்டிய பொருளாதாரத்தின் அடிப்படையில், என் கட்சியை நடத்தி மக்கள் பணியில் என்னை அர்ப்பணித்திருக்கிறேன். காமராஜர் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் அமைய வேண்டும் என, செயல்பட்டிருக்கிறேன். பதவியில் இருந்தால் தான் நம் இலக்கை அடைய முடியும் என்ற எண்ணத்தை கடந்து, சமத்துவ மக்கள் கட்சி, பா.ஜ.,வுடன் இணைந்து செயல்பட அனைவரின் ஆதரவுடன் முடிவெடுத்தேன்.டவுட் தனபாலு: கட்சியை துவங்குனீங்க என்பது சரி... அதை நடத்தினேன் என்று சொல்வது தான் இடிக்குது... தமிழகத்துல லட்டர் பேடு அளவுல இயங்குற நடிகர்கள் கட்சி எதுன்னு ஒரு போட்டி வைச்சா, டி.ராஜேந்தரின் லட்சிய தி.மு.க., கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சிக்கு அடுத்து உங்க கட்சிதான் வந்திருக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை!தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்: கர்நாடகா எப்போது பார்த்தாலும் தண்ணீர் தர மாட்டேன் என்று தான் சொல்லும். எந்த கர்நாடக அமைச்சராவது, 'நாங்கள் தமிழகத்திற்கு தண்ணீரை திறந்து விடுகிறோம்' என சொல்லியதை கேள்விப்பட்டு உள்ளீர்களா? ஒவ்வொரு முறையும் உச்ச நீதிமன்றம் சென்று, தண்ணீரை பெறுகிறோம். இம்முறையும் தண்ணீரை திறக்கவில்லை என்றால், உச்ச நீதிமன்றத்தை அணுகி பெறுவோம்.டவுட் தனபாலு: நீங்க சொல்வது வாஸ்தவம் தான்... ஆனா, கர்நாடகாவுல இப்ப தண்ணீர் தட்டுப்பாடு படுமோசமா இருக்குது... அவங்க இருக்கிற சூழல்ல, நமக்கு தண்ணீர் தராம இருந்தாலும் பரவாயில்லை... நம்மிடம் தண்ணீர் கேட்காம இருந்தாலே, அது பெரிய உதவி என்பதில், 'டவுட்'டே இல்லை!தி.மு.க., பொருளாளர் டி.ஆர்.பாலு: தன் பிறந்த நாள் பரிசாக, லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க., கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும் என, முதல்வர் ஸ்டாலின் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த வெற்றிகளை குவிக்க அரசியல் தந்திரம், வியூகம் மற்றும் என்னென்ன கடமைகள் செய்ய வேண்டுமோ, அவற்றை நாம் செய்ய வேண்டும்.டவுட் தனபாலு: என்ன பெரிய தந்திரம், வியூகம்... ஓட்டுக்கு இவ்வளவுன்னு ரேட் நிர்ணயம் பண்ணுவீங்க... அதை, பக்காவா பட்டுவாடா பண்ணுவதில் தான் உங்க தந்திரம், வியூகம், கடமை எல்லாம் அடங்கியிருக்குது என்பதில், 'டவுட்'டே இல்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

venugopal s
மார் 15, 2024 11:32

ஆனால் பாஜகவின் அந்த டீல் அவருக்கு பிடித்திருந்தது, அதனால் தான் கட்சியை விற்று விட்டார்!


vbs manian
மார் 15, 2024 08:59

சரத் தாமதமாக வந்தாலும் சரியான இடத்துக்கு வந்துள்ளார்.காமராஜர் ஆட்சி ஒரு அபூர்வ கனவு. திருப்புவது சாத்தியமில்லை.


சுந்தரம் விஸ்வநாதன்
மார் 15, 2024 08:42

அண்ணே சரத் அண்ணே கட்சியை என்ன விலைக்கு வித்தீங்க எனக்கு மட்டும் சொல்லுங்க. அப்படியே டி ராஜேந்தர் கட்சி, பாக்யராஜ் கட்சி கார்த்திக் கட்சி அப்படீன்னு இன்னும் ரெண்டு மூணு கட்சி விலைக்கு வருது. மொத்தமா ஒரு ரேட் பேசிடலாம்.


karupanasamy
மார் 15, 2024 07:45

வாக்காளர்களே திமுகவினரிடம் முடிந்தவரை மிக அதிகமாக பணத்தைப் பெற்றுக்கொண்டு மாத்ரு கட்சிக்கு வாக்களியுங்கள். மாத்ருகட்சிக்கு வாக்களித்தால் எங்களுக்குத்தெரிந்துவிடும் என்று சும்மா மிரட்டுவார்கள். அதெல்லாம் கண்டுபிடிக்கமுடியாது. நான் கடந்த தேர்தலில் குடும்ப மொத்த வாக்குகளுக்கும் கணிசமாக பெற்றுக்கொண்டு மாற்றுக்கட்சிக்கு வாக்களித்தேன். தேர்தல் தோல்விக்கு பிறகு கழக கயவர்கள் வந்து கேட்டால் விடியல் எங்களை ஏமாறியதற்கு பழிக்கு பழி என்று ஏகத்தகாலமாக பதில் சொல்லுங்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை