உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் உறவினர்கள், முன்னாள் அமைச்சர்களின் வீடுகள், அலுவலகங்களில், வருமான வரித்துறை, அமலாக்கத் துறை நடத்திய சோதனைகள் எல்லாம் என்னவாயின என்பதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சொல்வாரா? அந்த ஊழல் புகார்களை வைத்து கூட்டணி பேரம் நடத்தினர். பா.ஜ.,வின் கூட்டணிக்கு ஊன்றுகோலாக ஊழல்கள்தான் இருக்கின்றன. டவுட் தனபாலு: சரி விடுங்க... மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சி, மாநில கட்சிகளை மிரட்டி கூட்டணி வைப்பது சகஜம்தானே... 2011 சட்டசபை தேர்தலில், உங்க கட்சியினர் வீடுகள்லயும் அமலாக்கத் துறை, வருமான வரி சோதனைகளை மத்திய காங்., அரசு நடத்தி, உங்க கட்சி தலைமையை மிரட்டி, கூட்டணியில், 63 சட்டசபை தொகுதிகளை வாங்கியதை மறந்துட்டு பேசுறீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!பத்திரிகை செய்தி: தமிழகத்திற்கு நிதி வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக கூறியும், வக்ப் சட்டத் திருத்தத்தை கொண்டு வந்த மத்திய அரசைக் கண்டித்தும், சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக, மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் காங்கிரசார் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதல் பங்கேற்ற, 175 பேரை போலீசார் கைது செய்தனர்.டவுட் தனபாலு: சென்னை மாநகராட்சியில், 200 வார்டுகள் இருக்கு... வார்டுக்கு ஒரு நிர்வாகி வந்திருந்தால் கூட, 200 பேர் இருக்குமே... மாநில தலைவர் தலைமையில் நடந்த போராட்டத்துலயே, 175 பேர் மட்டும் கலந்துக்கிட்டு, தமிழக காங்., கட்சியின் பலத்தை, 'டவுட்'டே இல்லாம காட்டிக் கொடுத்துட்டாங்களே!அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு: தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை மாற்றப்பட்டதில் எங்களுக்கு சந்தோஷமும் இல்லை, வருத்தமும் இல்லை. 'அண்ணாமலையை மாற்றுங்கள்' என, எங்கள் கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமியும் சொல்லவில்லை. முன்னாள் முதல்வர் ஜெ., எட்டடி பாய்ந்தார். பழனிசாமி, 16 அடி பாய்வார். ஜெயலலிதா சிங்கம்; பழனிசாமி சிங்கக்குட்டி. 2026 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., தலைமையில் ஆட்சி அமையும்.டவுட் தனபாலு: ஜெ.,யை விட, பழனிசாமி உயர்ந்தவரா என்ன... தேசிய கட்சிகளின் டில்லி தலைவர்கள், கூட்டணி பேசுவதற்காக சென்னைக்கு வந்து, ஜெ., வீட்டில் பல மணி நேரம் காத்து கிடப்பாங்க... ஆனா, 16 அடி பாயும் பழனிசாமி, டில்லிக்கு போய் அல்லவா கூட்டணி பேசிட்டு வந்தாரு... ஜெ., என்ற மாபெரும் ஆளுமைக்கு நிகராக உங்க கட்சியில் யாரும் இல்லை என்பதுதான், 'டவுட்' இல்லாத உண்மை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Kjp
ஏப் 13, 2025 14:56

அதிமுக பாஜக கூட்டணி ஏற்பட்டது திமுகவினரை அதிர்ச்சி அடையச் செய்து விட்டது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக பிஜேபி வாக்குகளை கூட்டினால் பதினேழு மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்கும் என்பதால் திமுக கூட்டணிக்கு கிலி ஏற்பட்டு விட்டது. மேலும் டாஸ்மாக் ஊழல் மக்களிடம் பரவலாக பேசப்படும் பொருள் ஆகி விட்டது. தமிழகத்தில் வானிலை அறிக்கை போல் தினசரி கொலை பாலியல் வன்முறை செய்திகள் ஆகி விட்டது.


Anantharaman Srinivasan
ஏப் 13, 2025 12:50

லேடியா மோடியா யென்று சாவல் விட்டு ஜெயித்துக்காட்டியவர் ஜெ. அவர் மூச்சுக்காற்று கூட டெல்லிக்கு அலர்ஜியாக இருந்தது. எடப்பாடி பாதுகாப்பாக ... கட்டிக்கொண்டுதான் சந்திக்க வேண்டிய நிலை.


D.Ambujavalli
ஏப் 13, 2025 06:49

மோடிஜி கூட்டணிப்பேச்சுக்காக வீடு தேடி வந்தவருக்கே ‘வந்ததுக்கு விருந்து சாப்பிட்டுப்போங்கள் ‘ என்று அனுப்பிய ஜெயா எங்கே, வீறாப்பாக பாஜவுடன் கூட்டு இல்லை enru vittu,கூட இருக்கும் ,மாஜிகள், தொடர் தோல்வியிலிருந்து மீள மீண்டும் போய் டில்லியில் காலைக் கையைப்பிடித்து ஒட்டிக்கொண்ட இவர்தான் சிங்கக்குட்டியா? ஜால்றாவைக்கூட இவ்வளவு ஓங்கி ஓங்கி தட்டக்கூடாது சார்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை