உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன்: தற்போது நடக்கும் பல்வேறு அரசியல் சர்ச்சைகள் குறித்து, நிறைய பேச வேண்டி உள்ளது. அதையெல்லாம் விபரமாக பின்னர் பேசுகிறேன். இப்போதே பேச ஆசைதான்; ஆனாலும், அதற்கான நேரம் இதுவல்ல. நான் மேடையில் பேசும்போது, உயிரே, உறவே, தமிழே என சொல்வதற்கான அர்த்தத்தை முழுதுமாக உணர்கிறேன். உயிரோட்டமான இந்த வார்த்தைகளை தொடர்ந்து சொல்வேன்.டவுட் தனபாலு: நீங்க என்ன வார்த்தைகளை வேணும்னாலும் சொல்லுங்க... ஆனா, கர்நாடகாகாரங்க, உங்க வாயில இருந்து, 'மன்னிப்பு' என்ற ஒரே ஒரு வார்த்தையை தான் எதிர்பார்க்கிறாங்க... உங்க விருமாண்டி படத்துல, 'மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்; மன்னிக்கிறவன் பெரிய மனுஷன்' என, நீங்க பேசிய வசனத்தை நீங்களே மறந்துட்டீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!காங்., கட்சியை சேர்ந்த, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல்: பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி., மக்களின் காப்பீட்டு பிரீமியங்கள் வாயிலாக சேகரிக்கப்பட்ட, 5,000 கோடி ரூபாய் நிதியை அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ளது. பணம், பாலிசி, பிரீமியம் மக்களுடையது; ஆனால், பாதுகாப்பு, வசதி, பலன்கள் எல்லாம் அதானிக்கு!டவுட் தனபாலு: அதானி குழுமத்தில் முதலீடு செய்த பணம், பன்மடங்கு பெருகினால் அதன் பலன்கள், பாலிசி கட்டிய மக்களுக்கு தானே வந்து சேரும்... உங்க குற்றச்சாட்டை பார்க்கிறப்ப, மக்களுக்கு எந்த பலனும் கிடைக்கக் கூடாதுன்னு சொல்றீங்களா என்ற, 'டவுட்'தான் வருது!ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த, பஞ்சாப் முதல்வர் பகவந்த்சிங் மான்: 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில், பா.ஜ., ஓட்டு சேகரிக்கிறது. 'சிந்துார்' என்பதை பா.ஜ.,வினர் நகைச்சுவையாக மாற்றி விட்டனர். ஒவ்வொரு வீட்டிற்கும், குங்குமத்தை அவர்கள் அனுப்பி வருகின்றனர். அதை பிரதமர் மோடி பெயரில் பயன்படுத்துவீர்களா? இது, 'ஒரு நாடு; ஒரு கணவர்' திட்டமா?டவுட் தனபாலு: குங்குமம் மங்களகரமான பொருள்... அதை, யாரும் யாருக்கும் தரலாம்... அதை இந்த அளவுக்கு கொச்சைப்படுத்தி பேச உங்களால மட்டும்தான் முடியும்... இப்படியே ஏடாகூடமா பேசிட்டு இருந்தா, உங்க தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் டில்லி சட்டசபை தேர்தல்ல தோற்று வீட்டுல இருக்கிற மாதிரி, நீங்களும் சீக்கிரம் வீட்டுக்கு போயிடுவீங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Arul Narayanan
ஜூன் 09, 2025 17:26

அதானி அம்பானி கம்பெனிகளில் ராகுல் காந்தியே கோடிக் கணக்கில் முதலீடு செய்திருப்பார்.


ellar
ஜூன் 06, 2025 22:21

பெரிய மனிதர்கள் பலர் இருந்த பஞ்சாப்புக்கு கிடைத்த திருஷ்டி இப்போதைய அரசியல் அசிங்கம்


tamilvanan
ஜூன் 06, 2025 16:19

இந்த படத்தால் தமிழுக்கு பெருமை சேர்க்கிறாரா? வீண் பேச்சு. இந்த படம் ஒரு குண்டர் கும்பலின் தலைவர் பற்றியது. படம் எங்கும் பிணக்குவியலைகள். தலைவனுக்கு மனைவியுடன் ஒரு ஆசை நாயகியும் இருக்கிறார். அவருடன் கொஞ்சி கும்மாளம். சுகர் பேபி என்று "தூய தமிழில்" பாட்டு. இந்த அவலத்தில் தமிழ் என் உயிர் என்று பிதற்றல். வெட்கக்கேடு. படத்துக்கும் தமிழ் பண்பாட்டுக்கும் என்ன தொடர்போ?


S.V.Srinivasan
ஜூன் 06, 2025 13:50

நான் வெளில பேசினாலும் சரி ராஜ்ய சபையில் பேசினாலும் சரி. ஒருத்தருக்கும் ஒன்னும் புரியாது. அதுதான் எனக்கு பெரிய பிளஸ் பாயிண்ட். ஹி ஹி


Anantharaman Srinivasan
ஜூன் 06, 2025 11:57

LIC மக்கள் பாலிசி பணம் அதானி குழுமத்தில் முதலீடு, மக்களாகிய பாலிசிதாரர்களின் விருப்பபதை கேட்டு செய்ததல்ல. லாபம் வந்தால் சரி. நஷ்டம் வந்தால். ?


Suppan
ஜூன் 06, 2025 16:25

எல்லா முதலீடுகளுமே லாபம் ஈட்டும் என்று சொல்ல முடியாது. கோடிக்கணக்கான பாலிசிதாரர்களின் விருப்பத்தைக் கேட்டுக்கொண்டுதான் ஒவ்வொரு முதலீடும் செய்ய வேண்டும் என்றால் ஒரு தொழிலும் நடக்காது. தொழில் தெரிந்தவர்களிடம் கேட்டு பிறகு கருத்தைப் பதிவிடுங்கள்.


Anantharaman Srinivasan
ஜூன் 06, 2025 11:43

அரசியல் சர்ச்சைகள் குறித்து, நிறைய பேச வேண்டி உள்ளது.கமல். இப்போதே பேசினால் MP பதவிக்கு நானே ஆப்பு வைத்துக்கொண்டது போலாகிவிடும்.


Lakshminarasimhan
ஜூன் 06, 2025 10:30

பேசாமே கமல் கட்சி பெயரை மக்கள் நீதி மய்யம் என்பதற்கு பதில் மக்கள் பேதி மய்யம் என்று மாத்திக்கலாம்


கண்ணன்
ஜூன் 06, 2025 06:51

முறையான பள்ளிப் படிப்பே இல்லாதவர்களுக்கெல்லாம் முதலீடு பற்றிப் பேசுவதெல்லாம் இந்தியாவில் மட்டுமே நடக்கும் தலையெழுத்து!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை