உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ: ம.தி.மு.க., துணை பொதுச்செயலர் மல்லை சத்யா, கொஞ்ச நாட்களாக, கட்சியின் எந்த நிகழ்ச்சிக்கு வந்தாலும், ஒன்றும் பேசுவதில்லை. எந்த ஊரிலாவது, நான் ம.தி.மு.க.,வை சேர்ந்தவன் என்றோ, ம.தி.மு.க., துணை பொதுச்செயலர் என்றோ சொன்னதில்லை. மாமல்லபுரம் தமிழ் சங்கத்தின் தலைவர் சத்யா என சொல்லி, ஏழெட்டு முறை வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார். என்னுடன் சத்யா பல போராட்டங்களில் பங்கேற்றதற்காக, அவர் துரோகம் செய்யவில்லை என்றெல்லாம் சொல்ல முடியாது.டவுட் தனபாலு: மல்லை சத்யா உங்களுக்கு துரோகம் செய்தாரோ, இல்லையோ தெரியாது... ஆனா, 'வரலாறு திரும்பும்'னு சொல்வாங்க... அந்த மாதிரி, 'ஸ்டாலினுக்காக என் மீது கொலை பழி சுமத்தி கட்சியை விட்டு கருணாநிதி வெளியேத்தினார்'னு நீங்க பலமுறை சொல்லியிருக்கீங்க... இப்ப, உங்க மகன் துரைக்காக, மல்லை சத்யா மீது நீங்க பாயுறீங்க என்பது மட்டும், 'டவுட்'டே இல்லாம தெரியுது!பத்திரிகை செய்தி: தே.மு.தி.க., நிறுவனரான விஜயகாந்தின் ராசி எண், 5. இதனால், அ.தி.மு.க., கூட்டணியில், 23 சீட், தி.மு.க., கூட்டணியில், 14 சீட் கேட்டு, இரண்டு பக்கமும் கதவை திறந்து வைத்து, தே.மு.தி.க., காத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.டவுட் தனபாலு: அது சரி... 'எங்க தலைவருக்கு, 5 தான் ராசியான எண்' என்று சொல்லி, கூட்டுத்தொகை, 5 வர்ற மாதிரி சீட்களை கேட்கிறாங்களா... தே.மு.தி.க., இப்ப இருக்கிற நிலைக்கு ரெண்டு கட்சிகளுமே, வெறும், 5 சீட்களை மட்டும் ஒதுக்க முன்வந்தாலே பெரிய விஷயம் என்பதில், 'டவுட்'டே இல்லை!தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்: திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே, மது போதையால், 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு உள்ளார். வள்ளியூரில், தனியாக வீட்டில் இருந்த மூதாட்டியை நகைக்காக கொன்றுள்ளனர். தி.மு.க., ஆட்சியில் குழந்தைகள் முதல் முதியோர் வரை, எவருக்கும் பாதுகாப்பில்லை. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாததே, தி.மு.க., அரசின் நான்காண்டு சாதனை! டவுட் தனபாலு: முதல்வர் பாணியில் சொல்ல வேண்டும் என்றால், அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கிற சம்பவங்களை நீங்க அரசியலுக்காக பெருசுபடுத்துறீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

D.Ambujavalli
ஜூலை 12, 2025 16:58

இந்த ‘பாலியல் கொடுமை’ திருட்டு, கொள்ளை எல்லாம் அநேகமாக நித்தியப்படி செய்திகளாக மாறி, இவை இல்லாத நாளே இல்லை என்று ஆகியுள்ள நிலையில், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு, பாதுகாப்பு குறைபாடு உள்ளது என்று சொல்லாமல் என்ன செய்வது ?


Matt P
ஜூலை 12, 2025 10:40

வீட்ட்டிலிருக்கிற குழந்தைகளையும் முதியவர்களையும் பொறுப்புள்ள வீட்டிலுள்ளவர்கள் தான் கவனித்து கொள்ள வேண்டும். அவர் அவரை அப்பா என்று சொன்னது உண்மை தான். அதுக்காக ஓவ்வொரு குடும்பத்திற்கும் பாதுகாவலாக இருக்க முடியும். நாட்டை கவனிப்பதற்கே தடுமாறுறாரு மனுஷன்.


கண்ணன்
ஜூலை 12, 2025 10:19

இந்த மல்லை சத்யா என்பவருக்கு வேறு ஏதும் கட்சிகள் கிடைக்கவில்லையா? இந்த வெத்து வேட்டுக் கட்சியைக் கட்டிக்கொண்டு ஏன் அழவேண்டும்?


Bhaskaran
ஜூலை 12, 2025 09:18

புளுகுணி வைகோ செய்தி போடவேண்டாம் தனக்கு பின் கட்சி சொத்துக்களை புள்ளை அனுபவிக்கனும்கிற ஒரே நோக்கத்தில் புத்திபிசகிபோய் இம்மாதிரி பண்ணறார் செய்தியாளர்களுக்கு கறி சோறு போட்டேன் என்று பீத்திக்கொள்ளும் இவன் ஒரு அல்பபிறவி