வாசகர்கள் கருத்துகள் ( 1 )
‘தகுதி’ என்ற சொல்லை சேர்த்ததால், அது ‘பெரிய இடத்து’ பிள்ளைகளுக்கு சற்று குத்திக்காட்டுவது போல் இருந்திருக்கும் அதன் பிறகுகூட ஒருத்தரை கட்சியில் வைத்துக் கொண்டிருக்கலாமா?
தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்: அ.தி.மு.க., 54வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த தருணத்தில், கடந்து வந்த பாதையையும், தற்போதுள்ள நிலைமையையும் நினைத்து பார்த்தால், நெஞ்சம் கலங்குகிறது; கண்ணீர் வடிகிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழிநடத்தியபோது, கூட்டணி கட்சிகள், அ.தி.மு.க.,வை நோக்கி வந்தன. ஆனால், அந்த நிலை மாறி, கூட்டணிக்காக கையேந்த வேண்டிய நிலை, தற்போது ஏற்பட்டிருக்கிறது. * டவுட் தனபாலு: கூட்டணிக்காக எந்த கட்சியிடமும் அ.தி.மு.க., கையேந்துற மாதிரி தெரியலை... இவர் தான், 'என்னை எப்படியாவது மறுபடியும் உள்ளே சேர்த்துக்குங்க' என்று கையேந்திட்டு இருக்கார் என்பது, 'டவுட்' இல்லாம தெரியுது! *** பத்திரிகை செய்தி: தி.மு.க., முப்பெரும் விழா மேடையில், துணை முதல்வர் உதயநிதி அமர, இடம் ஒதுக்கியதற்கு நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டிய சென்னை ஆயிரம் விளக்கு பகுதி இளைஞர் அணியின் முன்னாள் நிர்வாகி சுரேஷ், 'தகுதியான பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமிக்க வேண்டும்' என்ற வாசகத்தையும் போஸ்டரில் குறிப்பிட்டிருந்ததால், அவரை கட்சியில் இருந்து, 'சஸ்பெண்ட்' செய்துள்ளனர். * டவுட் தனபாலு: அதானே... தகுதி எல்லாம் பார்த்து, தி.மு.க.,வில் பதவிகள் தந்தால், பாதிக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தேர மாட்டாங்களே... அமைச்சர்கள், மாவட்ட செயலர்களின் வாரிசுகள் மற்றும் உறவினர்களுக்கு தான் பதவிகள்ல முன்னுரிமை தருவாங்க... இந்த உண்மையை இவர் சுட்டிக்காட்டியதால் தான், துாக்கி கடாசிட்டாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை! -------- பத்திரிகை செய்தி: தமிழக காங்கிரசில், கிராம கமிட்டி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி நடந்து வருகிறது. இதுவரை, 24,000 கிராம கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் நிர்வாகிகள் எண்ணிக்கை, 2 லட்சத்தை தாண்டியுள்ளது. நிர்வாகிகள் நியமனம் முடிந்த பின், கட்சி நிர்வாகிகள், துணை அமைப்புகளின் நிர்வாகிகள் என, 3 லட்சம் பேர் பங்கேற்கும் மாநாட்டை நடத்தவும், அதில் ராகுலை பங்கேற்க வைக்கவும் காங்., நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர். * டவுட் தனபாலு: கிராம கமிட்டிகள்ல, 3 லட்சம் பதவிகளா...? தமிழக காங்கிரசில் இருக்கும் அனைவரையும் நிர்வாகிகளா நியமிச்சுட்டாங்களோ என்ற, 'டவுட்'தான் வருது... இல்லாத தொண்டர்களை நிர்வாகம் பண்ண, இத்தனை நிர்வாகிகள் அவசியமா என்ற, 'டவுட்'டும் கூடவே வருது!
‘தகுதி’ என்ற சொல்லை சேர்த்ததால், அது ‘பெரிய இடத்து’ பிள்ளைகளுக்கு சற்று குத்திக்காட்டுவது போல் இருந்திருக்கும் அதன் பிறகுகூட ஒருத்தரை கட்சியில் வைத்துக் கொண்டிருக்கலாமா?