உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்: த.வெ.க.,வில் இணைபவர் களுக்கு, மக்கள் மத்தியில் என்ன செல்வாக்கு உள்ளது என்பது எல்லாருக்கும் தெரியும். தமிழகத்தில், அ.தி.மு.க.,வை விட பெரிய கட்சி எதுவுமில்லை. த.வெ.க., தலைவர் விஜயை பார்த்து நாங்கள் பயப்படவில்லை. சட்டசபை தேர்தலில், முதல் இடத்தை அ.தி.மு.க., கூட்டணி தான் பிடிக்கும். இரண்டாம் இடத்திற்கு தான், தி.மு.க., --- த.வெ.க., இடையே போட்டி உள்ளது. டவுட் தனபாலு: சமீபத்தில், ஒரு தனியார் கல்லுாரி நடத்திய கருத்து கணிப்பில், முதல்வர் வேட்பாளர்களில் ஸ்டாலினுக்கு அடுத்தபடியா, ரெண்டாவது இடத்தில் விஜயும், மூன்றாவது இடத்தில் உங்க தலைவர் பழனிசாமியும் இருந்தாங்களே... அதன்பிறகும் நாங்க தான் முதலிடம்னு எப்படி சொல்றீங்க என்ற, 'டவுட்' வருதே! தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை: பொங்கலுக்கு, 3,000 ரூபாய் கொடுத்தால், மக்கள் ஓட்டு போடுவர் என தி.மு.க., நம்புகிறது. கடந்த, 2021ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்தபோது, ஒரு ரேஷன் கார்டு மீது, 2 லட்சத்து 4,000 ரூபாய் கடன் இருந்தது; தற்போது, 4 லட்சத்து 54,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த கடனை, முதல்வர் ஸ்டாலின் கட்டப் போவது கிடையாது. நம் குழந்தைகள் தான் கட்ட வேண்டும். ஆட்சிக்கு வந்து, 5 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக கடன் பெற்றுள்ளனர். டவுட் தனபாலு: 'தகப்பன் வாங்குற கடன் பிள்ளைகள் தலையில் விடியும்'னு கிராமங்கள்ல சொல்வாங்க... அந்த வகையில், தமிழக மாணவர்கள் எல்லாம், 'அப்பா' என, அன்புடன் தன்னை அழைப்பதாக சொல்ற முதல்வர் ஸ்டாலின் வாங்குற கடன்கள், நாளைக்கு அந்த மாணவர்கள் தலையில் தான், வரிகளா வந்து விடியும் என்பதில், 'டவுட்'டே இல்லை! தமிழக சட்டசபை காங்., தலைவர் ராஜேஷ்குமார்: வரும் சட்டசபை தேர்தலுக்காக, கடுமையாக உழைத்து, பூத் கமிட்டிகள் அளவில், தமிழக காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே, அதிகமான தொகுதிகளை தி.மு.க., விடம் கேட்டு வாங்க முடியும். டவுட் தனபாலு: சரியா போச்சு... எல்லா கட்சிகளும், ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே பூத் கமிட்டிகளை பலப் படுத்தி, தேர்தல் களத்தில் இறக்கி விட்டுட்டாங்க... நீங்க, இனிமே பூத் கமிட்டிகளை பலப்படுத்தி முடிக்கிறதுக்குள்ள, 2029 லோக்சபா தேர்தலே வந்துடும் என்பதில், 'டவுட்'டே இல்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Jeya Kumar
ஜன 08, 2026 18:14

என்ன சென்ட்ரல் கவர்ன்மென்ட் வாங்குன 100,00,000 கோடி புதிய கடன் யாரு தலையில போகும் ?.


sakthivel
ஜன 08, 2026 09:56

அந்த கருத்துக்கணிப்பு நடத்தியது லயோலா கல்லூரி அது யாருக்கு ஆதரவாக கணிப்பை பரப்புவார்கள் என்று தெரியாத சும்மா எடப்பாடி பழநிஸ்வாமி மூன்றாம் இடம் என்று போdaatheenga


N Sasikumar Yadhav
ஜன 08, 2026 07:48

சிவன் கோயில் இடத்தை 99 வருட குத்தகைக்காலம் முடிந்தும் ஆக்கிரமித்து கொண்டிருக்கிற தனியார் கல்லூரிதானே அவனுங்க போட்ட ஓட்டுப்பிச்சையால் ஆட்சிக்கு வந்த கட்சிக்கும் அவனுங்க மத தலிவனுக்கும்தான் ஆதரவாக இருப்பானுங்க என்பது டவுட் தங்கபாலுக்கு டவுட் வரவில்லையா


D.Ambujavalli
ஜன 08, 2026 06:28

எப்படியும் திமுக தர்மம் செய்யும் 5, 10 சீட்களில் ஜெயித்து வந்தாலும், contract, கமிஷன் எதுவும் நம் கைக்கு எட்டப்போவதில்லை. பூத் கமிட்டி இன்றே அமைத்தாலும் மீதி 4 மாதம் எத்தனைபேர் நிலைத்து வேலை செய்வார்கள் என்று நிச்சயமில்லை. அலட்சியம், மேலிடம் முதல் ஊடுருவி உள்ள நிலையில், நிர்வாகிகள், தொண்டர்கள் மட்டும் என்ன அக்கறை காட்டப் போகிறார்கள்?