உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன்: தமிழகத்தின் கல்வி வளர்ச்சி, பின்னோக்கி செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அரசு பள்ளிகள், திருப்பூரில் 9; பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 2; உசிலம்பட்டியில் 3; நீலகிரியில் 3 பள்ளிகள், மாணவர்கள் வருகையின்றி மூடப்பட்டுள்ளன. தி.மு.க., ஆட்சியில், 207 அரசு பள்ளிகள் மூடப்பட்டதாக அறிக்கைகள் கூறுகின்றன. எனவே, அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுப்பதோடு, மூடப்பட்ட பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும். டவுட் தனபாலு: 'அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல; பெருமையின் சிறப்பு'ன்னு வசனம் பேசியே கடந்த தி.மு.க., ஆட்சியில் காலத்தை ஓட்டிட்டு போயிட்டாங்க... புதிய த.வெ.க., அரசு, பள்ளிகளை மீட்டெடுக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்தால், 'டவுட்'டே இல்லாம அவங்களை பாராட்டலாம்! வி.சி.க., தலைவர் திருமாவளவன்: சட்டசபை தேர்தலில், பட்டியலின மக்களின் ஓட்டுகள் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு சென்றதாக கூறுகின்றனர். அனைத்து சமூக ஓட்டுகளையும் விஜய் பெற்றுள்ளார். 59 தொகுதிகளில், தி.மு.க., வெற்றி பெற்றதில் வி.சி.க.,வின் பங்கு முக்கியமானது. ஆயினும், தேர்தல் தோல்வி குறித்து தி.மு.க., ஆராயவில்லை. டவுட் தனபாலு: உங்க வாதப்படியே, 59 தொகுதிகளில் தி.மு.க., பெற்ற வெற்றியில் உங்க கட்சியின் பங்களிப்பு இருந்திருந்தால், அவங்க உங்களுக்கு தந்த எட்டு தொகுதிகளில், வெறும் ரெண்டில் மட்டும் தானே நீங்க ஜெயிச்சீங்க... 59 தொகுதிகளில் தி.மு.க.,வை ஜெயிக்க வைத்த உங்களால், உங்களது ஆறு தொகுதிகளில் ஏன் ஜெயிக்க முடியலை என்ற, 'டவுட்' வருதே! அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: ஆண்டுதோறும் தண்ணீருக்காக நாம் கையேந்தி நிற்க வேண்டும் என, கர்நாடக ஆட்சியாளர்கள் நினைக்கின்றனர். நமக்குரிய நீரை திறந்து விட, கர்நாடக அரசை தமிழக முதல்வர் விஜய் வலியுறுத்த வேண்டும். 'காவிரியில் நம் பங்கு நீரை காங்., அரசு தராவிட்டால், தமிழக அமைச்சரவையில் இருந்து காங்., அமைச்சர்கள் விடுவிக்கப்படுவர்' என எச்சரிக்க முதல்வர் விஜய் தயாரா? டவுட் தனபாலு: மத்திய பா.ஜ., அரசின் தே.ஜ., கூட்டணியில் தானே நீங்க இருக்கீங்க... அதனால, 'தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கும்படி கர்நாடகாவுக்கு உத்தரவிடுங்க'ன்னு, மத்திய அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்கலாமே... உங்களை யார் தடுக்கிறாங்க என்ற, 'டவுட்' வருதே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Anantharaman Srinivasan
ஜூலை 13, 2026 22:36

நுனிமரத்தில் உட்கார்ந்து அடிமரத்தை வெட்டிய கதையாகும். காவிரியில் நமக்குரிய நீரை கர்நாடக காங். அரசு தராவிட்டால், தன் அமைச்சரவையில் இருந்து காங்., அமைச்சர்களளை விடுவித்தால் தவெக மைனாரிட்டி அரசு கவிந்து விடுமே.


D.Ambujavalli
ஜூலை 13, 2026 19:52

அரசுப்பள்ளி. ஆசிரியர்களின். நியமனத்தில். ஊழல் நூறு பள்ளிக்கு 80. ஆசிரியர்கள். இளைய. தாயின். விதத்தில்தான். அரசுப்பள்ளிகள். நடத்தப்படுகின்றன. மெல்ல மெல்ல. அரசுப்பள்ளிகளே . இல்லையென்று ஆகிவிட்டால், அரசியல்வாதிகளின். பள்ளிகள். கற்பக. விருட்சமாக. இருக்குமே அந்த நிலைக்கான. அடித்தளம்தான். இந்த. பள்ளிகள். மூடுவது.


D.Ambujavalli
ஜூலை 13, 2026 19:52

அரசுப்பள்ளி. ஆசிரியர்களின். நியமனத்தில். ஊழல் நூறு பள்ளிக்கு 80. ஆசிரியர்கள். இளைய. தாயின். விதத்தில்தான். அரசுப்பள்ளிகள். நடத்தப்படுகின்றன. மெல்ல மெல்ல. அரசுப்பள்ளிகளே . இல்லையென்று ஆகிவிட்டால், அரசியல்வாதிகளின். பள்ளிகள். கற்பக. விருட்சமாக. இருக்குமே அந்த நிலைக்கான. அடித்தளம்தான். இந்த. பள்ளிகள். மூடுவது.


panneer selvam
ஜூலை 13, 2026 17:55

River belonged to states. Central Government can not interfere .


கண்ணன்
ஜூலை 13, 2026 11:56

போன ஆட்சியில் பள்ளிப் படிப்பை மட்டுமே முடித்த ( படித்த இல்லை) ஒருவர் அமைச்சராக இருந்து ரசிகர் மன்றம் மற்றும் ஊழலுக்கு ஒரு அலுவலகம் திறந்து ஓடிவிட்டார் இப்போதைய பள்ளிக் கல்வி அமைச்சரின் நடவடிக்கை எப்படி இருக்குமோ!


VSMani
ஜூலை 13, 2026 11:36

காவிரியில் நம் பங்கு நீரை காங்., அரசு தராவிட்டால், தமிழக அமைச்சரவையில் இருந்து காங்., அமைச்சர்கள் விடுவிக்கப்படுவர் என முதல்வர் விஜய் எச்சரிக்கை விட சொல்லும் பழனிசாமி, , தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கும்படி கர்நாடகாவுக்கு உத்தரவிடுங்கன்னு, இல்லை என்றால் மத்திய பா.ஜ., அரசின் தே.ஜ., கூட்டணியில் இருந்து நாங்கள் விலகிவிடுவோம் என்று பா.ஜ., வுக்கு எச்சரிக்கை விடலாமே.


VSMani
ஜூலை 13, 2026 11:31

தமிழகத்தின் கல்வி வளர்ச்சி, பின்னோக்கி செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது என சொல்லும் வானதி மோடிஜி யிடம் சொல்லி தமிழகத்திற்கான கள்விக்குறிய பல ஆயிரம் கோடி பணத்தை கொடுக்க சொல்லவேண்டியதுதானே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை