உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி: முன்னாள் முதல்வர் காமராஜர் உடலை அரசு மரியாதையோடு, கொட்டும் மழையில் அடக்கம் செய்தவர், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி. 'காமராஜருக்கு மகன் இல்லை என்ற குறையை தீர்க்கும் வகையில் கருணாநிதி செயல்பட்டார்' என, மூத்த காங்கிரஸ் தலைவர்களே தெரிவித்துள்ளனர். டவுட் தனபாலு: காமராஜர், தமிழக முதல்வராக ஒன்பது ஆண்டுகள் இருந்தவர்... எம்.பி.,யாகவும் இருந்திருக்கார்... அவருக்கு, தானாகவே அரசு மரியாதை தரப்படும்... அதேபோல, கொட்டும் மழையில உடல் அடக்கம் பண்ணக்கூடாதுன்னு ஏதோ சட்டம் இருந்த மாதிரியும், அதை மீறி கருணாநிதி உதவி செஞ்சது மாதிரியும் பேசுவது சரியா என்ற, 'டவுட்' வருதே! பத்திரிகை செய்தி: செங்கல்பட்டு மாவட்டம், மாம்பாக்கம் ஊராட்சி தலைவரான வீராசாமி, தி.மு.க.,வில் இருந்து விலகி, சமீபத்தில் த.வெ.க.,வில் இணைந்தார். அக்கட்சியில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணைச் செயலராக இருந்த இவர், ஊராட்சியில் நடந்த பணிகளுக்கான தொகையை விடுவிக்க, நவீன் என்ற ஒப்பந்ததாரரிடம் 1.30 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக, சமூக வலைதளங்களில் வீடியோ பரவியது. இதையடுத்து, அவர் த.வெ.க.,வில் இருந்து நீக்கப்பட்டதுடன், கைதும் செய்யப்பட்டார். டவுட் தனபாலு: லஞ்சத்துக்கு எதிரான இந்த நடவடிக்கை பாராட்டப்பட வேண்டியது தான்... அதே நேரம், மாற்று கட்சிகளில் இருந்து த.வெ.க.,வுக்கு வருவோரது கடந்த கால வரலாறுகளையும் கொஞ்சம் புரட்டி பார்த்து, அவங்களை சேர்த்திருந்தால், இந்த மாதிரி தர்மசங்கடங்கள் ஆளுங்கட்சிக்கு வராது என்பதில், 'டவுட்'டே இல்லை! வி.சி.க., தலைவர் திருமாவளவன்: தமிழக அமைச்சரவையில் பங்கேற்கும் நிலைப்பாட்டை, இந்திய கம்யூ., கட்சி மேற்கொண்டால், அந்த முடிவை நாங்கள் வரவேற்போம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.,க்களை, த.வெ.க., பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபடுவது ஜனநாயகத்துக்கு எதிரானது. இது போன்ற செயல்களை வி.சி.க., தொடர்ந்து கண்டித்து வருகிறது. டவுட் தனபாலு: இந்த மாதிரி கொள்கை, கோட்பாடு எல்லாம் பேசுறவங்களை நம்பி, அஞ்சு வருஷங்களை ஓட்ட முடியுமா என்ற, 'டவுட்'ல தான், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்களை ஆளுங்கட்சி தரப்பு இழுத்துட்டு இருக்கு... அது இருக்கட்டும்... தி.மு.க., எது செஞ்சாலும், அதுக்கு முரட்டுத்தனமா முட்டு கொடுத்துட்டு இருந்த நீங்க, த.வெ.க.,விடம் மட்டும் பாரபட்சம் பார்ப்பது ஏன் என்ற, 'டவுட்' வருதே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Anantharaman Srinivasan
ஜூலை 18, 2026 21:16

R S பாரதி கதை விடுகிறார். காமராஜரை அடக்கம் செய்த தினதன்று மழை வரவில்லை. அவர் சவ ஊர்வலத்தை தேனாம்பேட்டை சிக்னல் எதிரே உள்ள ஆனந்த் ஹோட்டல் மாடியிலிருந்து பார்த்தவன்.


MARUTHU PANDIAR
ஜூலை 18, 2026 20:12

காமராஜர் உயிர் நீத்து அரை நூற்றாண்டுகளுக்கு மேல் ஆகிறது. மழை பெய்ததா இல்லையா என்பதே எவருக்கும் நினைவில்லை. இப்போது இவர் கருணாநிதிக்கு சர்டிபிகேட் குடுத்து எல்லோர் காதிலும் பூவை சுற்றுகிறார். அப்படியே பெய்திருந்தாலும் ஒரு முதல்வராய் இருந்தவரை குடை கூட கொடுக்காமல் அப்படி கொட்டும் மழை யில் நனைய விட்டிருப்பங்களா? நம்பிடுவாங்கனு நெனச்சு அடித்து விடுறாரு மனுஷன்.


MARUTHU PANDIAR
ஜூலை 18, 2026 20:00

காமராஜர் உயிர் நீத்து அரை நூற்றாண்டுகளுக்கு மேல் ஆகிறது. மழை பெய்ததா இல்லையா என்பதே எவருக்கும் நினைவில்லை. இப்போது இவர் கருணாநிதிக்கு சர்டிபிகேட் குடுத்து எல்லோர் காதிலும் பூவை சுற்றுகிறார். அப்படியே பெய்திருந்தாலும் ஒரு முதல்வராய் இருந்தவரை குடை கூட கொடுக்காமல் அப்படி கொட்டும் மழை யில் நனைய விட்டிருப்பங்களா? நம்பிடுவாங்கனு நெனச்சு அடித்து விடுறாரு மனுஷன்.


Suppan
ஜூலை 18, 2026 20:33

அவர் இறந்த பொழுது முதல்வராக இல்லை . அதனால் மெரீனா கடற்கரையில் அவர் உடலை அடக்கம் செய்ய அனுமதி கொடுக்காத திமுகவுக்கு நன்றி. காமராஜ் விஷயத்தில் மெரீனா கடற்கரையை மேலும் இடுகாடாக்காமல் விட்ட திமுகவுக்கு நன்றி. ஆனால் கருணா இறந்த பொழுது அவர் முதல்வராக இல்லை. அவரை மெரீனா கடற்கரையில்தான் அடக்கம் செய்யவேண்டும் இல்லாவிடில் அவருடைய ஆத்மா "சாந்தி " அடையாது என்று அழுது புரண்டு ஆர்ப்பாட்டம் செய்தது யார் ? இதே திருட்டு திமுக தானே


D.Ambujavalli
ஜூலை 18, 2026 18:57

1 / 30. லட்சம். லஞ்சம். வாங்கியவரை. கட்சியில் இருந்து. நீக்கிவிட்டால், மனு. நீதி. ஆட்சி. ஆகிவிடுமா? விஜயபாஸ்கர்கள் போன்றவர்கள். இதற்கு. விலக்கா? ஆயிரம். கோடிகள். என்றால் Red . Carpet வரவேற்பளிக்கலாம். போலிருக்கிறது1


duruvasar
ஜூலை 18, 2026 11:07

தன தலைமை பதவிக்கு பங்கம் வரக்கூடாது என்பதர்காகத்தான் இந்த த.வெ.க.,விடம் மட்டும் பாரபட்சம். த.வெ.க. வில் சேர்ந்த தன தொண்டர்களை கொள்கையற்ற பதர்கள் என கூறியே இவரும் அந்த பதர்களில் ஒரு பதர் என்பதில் எந்த டவுட்டும் இல்லாமல் புரிந்திருக்கும் .


A viswanathan
ஜூலை 18, 2026 10:54

கருணாநிதி அவரை எப்படி எல்லாம் அவமானபடித்தினார் என்பதையும் பதிவு செய்யவும்


பேசும் தமிழன்
ஜூலை 18, 2026 09:11

அப்படியே.... பார் உலகம் போற்றும் ஒப்பற்ற தலைவர் காமராஜர் அவர்கள் மெரினாவில் அடக்கம் செய்ய இடம் கெடுக்காமல் செய்தது யார் என்பதையும் குறிப்பிட்டால் நன்றாக இருக்கும்.