வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தமிழ்நாடு கர்நாடகா காவிரி பிரச்சனை ஆண்டுதோறும் வரும் திருவிழா மாதிரி இதே கூத்துதான். மழை வெள்ளம் வந்தபின் அடங்கி விடும். பின் அடுத்த ஆண்டு மே ஜுன் லில் தொடங்கும். மத்திய இரு மாநில அரசியல் அக்கப்போர்.
தி.மு.க., முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ., வுமான செந்தில் பாலாஜி: த.வெ.க., - எம்.எல்.ஏ.,க்களிடம் குதிரை பேரம் பேசியது தொடர்பான புகாரிலும், வழக்குப் பதிவிலும் என் பெயர் இல்லை. ஆனாலும், என் பெயர் சேர்க்கப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறேன். 'டாஸ்மாக்' முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை தற்போது பதிவு செய்துள்ள புதிய வழக்கும், நீண்ட காலத்துக்கு நிலைக்காது. டவுட் தனபாலு: அ.தி.மு.க., ஆட்சியில் நீங்க அமைச்சரா இருந்தப்ப, போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தர்றதா மோசடி செய்த வழக்கு இருக்கு... அடுத்து, தி.மு.க., ஆட்சியில், 'டாஸ்மாக்' முறைகேடு, இப்ப, த.வெ.க., - எம்.எல்.ஏ.,க்களிடம் குதிரை பேரம் பேசிய வழக்கு வருது... சிலருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது போல, செந்தில் பாலாஜி சென்ற இடமெல்லாம் வழக்குகள் வருவது ஏன் என்ற, 'டவுட்' தான் வருது! ---- காங்., கட்சியைச் சேர்ந்த, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்: தமிழகத்தில் காங்., வளர்ச்சிக்கு, உட்கட்சிப் பூசலும், நிர்வாகிகள் கோஷ்டிகளாக செயல்படுவதும் முட்டுக்கட்டையாக இருக்கிறது. தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள், அனைத்து நிலை நிர்வாகிகளையும் அரவணைத்துச் செல்ல வேண்டும். மாவட்டத் தலைவர்களுக்கு அதிகாரம் வழங்கப்படும். அதற்காக, அரசர் போல் செயல்படக்கூடாது; மக்கள் சேவகர்களாக இருக்க வேண்டும். டவுட் தனபாலு: அது சரி... உங்களைச் சந்திக்க, டில்லி வரும் பல்வேறு மாநில முதல்வர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளை, பல நாட்கள் காத்திருக்க வைக்கிறீங்களே... அதனால, இளவரசர் என்ற மனப்பான்மையில் இருந்து, நீங்க தான் முதல்ல இறங்கி வரணும் என்பதில், 'டவுட்'டே இல்லை! ----- மா.கம்யூ., கட்சியின் தமிழக செயலர் சண்முகம்: தமிழகத்திற்கு, 3,500 கன அடி நீர் திறந்து விட, காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. அப்போது, 'கர்நாடக அணைகளில் தண்ணீரே இல்லை; குடிநீருக்கே பற்றாக்குறை ஏற்படும்' என அம்மாநில அரசின் பிரதிநிதிகள் கூறினர். இரண்டு நாட்களில் நிலைமை தலைகீழாக மாறி, கபினி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இரண்டே நாட்களில் அணை எப்படி நிரம்பியது? டவுட் தனபாலு: கபினி அணை நிரம்பும் நிலையில் இருந்தும், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட கர்நாடக ஆட்சியாளர்களுக்கு மனமில்லை... இது, வருண பகவானுக்கே பொறுக்காமல், மழையாகப் பொழிந்து, கபினி அணையை நிரப்பிட்டாரோ என்ற, 'டவுட்' தான் வருது!
தமிழ்நாடு கர்நாடகா காவிரி பிரச்சனை ஆண்டுதோறும் வரும் திருவிழா மாதிரி இதே கூத்துதான். மழை வெள்ளம் வந்தபின் அடங்கி விடும். பின் அடுத்த ஆண்டு மே ஜுன் லில் தொடங்கும். மத்திய இரு மாநில அரசியல் அக்கப்போர்.