சிவகங்கை காங்., - எம்.பி.,கார்த்தி: 'ஆட்சியில் பங்கு; அதிகாரத்திலும் பங்கு' என, முதன்முதலில் குரல் எழுப்பியதே நான் தான். எல்லாரும் இதை வரவேற்றனர். வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன், தனக்கும் முதல்வர் கனவு உண்டுஎன, தெரிவித்திருக்கிறார்; அதில்தவறில்லை. கட்சி துவங்கி தேர்தலை சந்திக்காதவர்களே முதல்வர் கனவில் இருக்கும்போது, நீண்ட காலமாக அரசியலில் பலகட்ட போராட்டங்களை சந்தித்திருக்கும் திருமாவுக்கு, ஏன் அப்படியொருகனவு இருக்கக் கூடாது.டவுட் தனபாலு: அது சரி... நீங்கஇப்படி திருமாவை கொம்பு சீவி விடுவதன் வாயிலாக, பக்கத்து இலைக்கு பாயசம் கேட்குறீங்களோ என்ற, 'டவுட்'தான்வருது!தமிழக துணை முதல்வர் உதயநிதி: கடந்த சில தினங்களுக்கு முன், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த திண்டுக்கல் சீனிவாசன்,கட்சி கூட்டத்தில் பேசும்போது, 'கூட்டணிக்கு கூப்பிட்டா ஒருத்தன்200 கோடி ரூபாய் கேட்கிறான்; 20 சீட் கேட்கிறான்' என்கிறார்.அவர்கள் கூட்டணி, பேரம் பேசும் கூட்டணி; நம் கூட்டணி கொள்கை கூட்டணி.டவுட் தனபாலு: 'கொள்கைக்காகவே சேர்ந்த கூட்டம் நாங்க'ன்னு சொல்றீங்களே... அப்புறம் ஏன் கடந்த சட்டசபை தேர்தல்ல, ரெண்டு கம்யூ., கட்சிகளுக்கும் தலா, 15 கோடி ரூபாய் கொடுத்தீங்களாம்... காம்ரேட்கள்,தங்களது கொள்கையை, 15 கோடி ரூபாய்க்கு உங்களிடம்வித்துட்டாங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: கடந்த ஜூலை 10ம் தேதி தமிழகம்வந்த அதானி, முதல்வர் ஸ்டாலினை ரகசியமாக சந்தித்துசென்றிருக்கிறார். சந்திப்பை வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு, என்ன பேசி முடிக்கப்பட்டது? அதானியின் மகன் கரன்அதானி, துணை முதல்வரான உதயநிதியின் பதவியேற்புக்கு வாழ்த்து சொல்லியது எதன் வெளிப்பாடு. தி.மு.க., அரசுக்கும்,கவுதம் அதானிக்கும் இடையே என்ன ரகசிய உறவு? இதுதான், உழைக்கும் அடித்தட்டு மக்களுக்கான ஆட்சியா?டவுட் தனபாலு: தொழில் துவங்க அதானி வந்திருந்தால்,தமிழகத்தில் தொழில் முதலீடுகளை போட்டி போட்டு ஈர்க்கிறதாசொல்ற முதல்வரும், அமைச்சர்களும், அதை பட்டவர்த்தனமா, 'பப்ளிசிட்டி' பண்ணியிருப்பாங்களே... ரகசியமா சந்திப்பு நடந்திருக்கிறதை பார்த்தாலே ஏதோ பெரிய, 'டீலிங்' நடந்திருக்கு என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுதே!