உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேரு: 'உள்ளாட்சிஅமைப்புகள், ஆண்டுதோறும்சொத்து வரியை உயர்த்த வேண்டும்' என, மத்திய அரசு நிபந்தனை விதித்தபோது, அதைஏற்றுக் கொண்டவர் அப்போதையமுதல்வர் பழனிசாமி. தற்போது,திடீரென மக்கள் மீது அக்கறை கொண்டவராக வேஷம் போடுவது வேடிக்கை.டவுட் தனபாலு: எதிர்க்கட்சியாகஇருக்கும்போது மக்கள் மீது அக்கறையுடன் இருப்பதும், ஆளுங்கட்சியாகி விட்டால், அவங்களை கண்டுக்காமல் விடுவதிலும், ரெண்டு திராவிட கட்சிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல என்பதில், 'டவுட்'டே இல்லை!பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: மக்களுக்கு தேவையான ஜாதி, பிறப்பு சான்றிதழ்கள், பட்டா மாறுதல், குடிநீர் இணைப்பு உள்ளிட்ட சேவைகளை வழங்க வேண்டியது, மாநில அரசின் பணி. தவிர்க்கக் கூடாத இந்த சேவைகளை கூட சரியான நேரத்தில் வழங்குவதில்லை. லஞ்சம் கொடுக்க வேண்டிஇருப்பதாக, மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். தி.மு.க.,வின்தேர்தல் வாக்குறுதிப்படி, பொதுசேவை பெறும் உரிமைசட்டத்தை நிறைவேற்றினால், மக்களுக்கு உரிய நேரத்தில் அரசின் சேவைகள் கிடைக்கும்.டவுட் தனபாலு: ஆர்.டி.ஓ., மற்றும்பத்திரப்பதிவு அலுவலகங்கள்ல லஞ்சத்தை தடுக்க, கண்காணிப்புகேமராக்கள் பொருத்தினாங்களே...அதனால, அங்க லஞ்சம் குறைஞ்சிடுச்சா...? அந்த மாதிரி,இந்த சட்டம் வந்தாலும், அதுக்கும் ஒரு மாற்று வழியை லஞ்ச பேர்வழிகள் உருவாக்கிடுவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!பத்திரிகை செய்தி: மார்க்சிஸ்ட்கம்யூ., கட்சி மாநில செயலர் பாலகிருஷ்ணன், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சளி மற்றும் தொண்டை வலிக்கு, அவர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவரது உடல்நிலை நன்றாக இருப்பதாகவும், விரைவில், 'டிஸ்சார்ஜ்' செய்யப்படுவார் என்றும், மார்க்சிஸ்ட் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.டவுட் தனபாலு: அவர் சீக்கிரம்குணமடைய வாழ்த்துகள்... கம்யூ.,தலைவர்களுக்கு உடம்பு சரிஇல்லன்னா, அரசு மருத்துவமனைகள்ல தான் சேர்றாங்க... ஆனா, தாங்களே நிர்வாகம் பண்ற அரசு மருத்துவமனையில்ஆளுங்கட்சி தலைவர்கள் சிகிச்சை எடுத்துக்காம, தனியார்மருத்துவமனைகளுக்கு ஓடுவதுஏன் என்ற, 'டவுட்' வருதே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Anantharaman Srinivasan
டிச 01, 2024 12:36

கம்யூனிஸ்ட் தலைவரெல்லாம் தனியார் மருத்துவனைக்கு போனா திமுக தான் bill செட்டில் பண்ணணும்


D.Ambujavalli
டிச 01, 2024 06:54

நாளைக்கு நீங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த அததனையும் மறந்துவிடுவார்கள் கனிமொழி மதுவிலக்கு உறுதியளிப்பு போல இப்போது பாருங்க, தமிழ் நாட்டில் தேடினால்கூட ஒரு இளம் விதவையுமே இல்லை என்பார் ‘ஒன்றுமில்லாத வெள்ளாட்டிக்கு, கால்பணம் தாலி போதாதா’ ? கம்யூனிஸ்ட் தலைவரெல்லாம் தனியார் மருத்துவனைக்கு போகும் தகுதி உள்ளவரா ?


சமீபத்திய செய்தி