உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / திருமண உறவின் புனிதத்தை புரிந்துகொள்ள இளம் தலைமுறையினருக்கு கோர்ட் அறிவுரை

திருமண உறவின் புனிதத்தை புரிந்துகொள்ள இளம் தலைமுறையினருக்கு கோர்ட் அறிவுரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : திருமணம் என்பது வெறும் ஆட்டம், பாட்டம், வகை வகையான விருந்து என்பதல்ல. ஹிந்து திருமணச் சட்டத்தின்படி, அது ஒரு புனிதமான உறவு. திருமண வாழ்க்கைக்குள் நுழைவதற்குமுன், இந்த சடங்குகளின் முக்கியத்துவத்தை, அதன் மகிமையை இளம் தலைமுறையினர் புரிந்து கொள்ள வேண்டும் என, உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.ஹிந்து திருமணச் சட்டத்தின்கீழ், விவாகரத்து கேட்டு இளம் தம்பதியினர் தொடர்ந்த வழக்கில் விவாகரத்து வழங்கி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி. நாகரத்தினா, அகஸ்டின் ஜார்ஜ் மாஷி அமர்வு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. அப்போது அமர்வு கூறியுள்ளதாவது:ஹிந்து திருமணச் சட்டத்தின்படி, சில முக்கிய சடங்குகளை பின்பற்ற வேண்டும். அந்த சடங்குகள் செய்தால் மட்டுமே, அந்த திருமணம் செல்லும். குறிப்பாக, 'சாத்படி' எனப்படும், அக்னியை சாட்சியாக வைத்து, ஏழு அடிகள் தம்பதியினர் வைப்பதாகும். இதற்கான பெரும் முக்கியத்துவம், ரிக் வேதம் உள்ளிட்டவற்றில் கூறப்பட்டுள்ளன. இவ்வாறு ஏழு அடிகளை, அந்த ஜோடி எடுத்து வைக்கும்போது, ஒருவரை ஒருவர் நண்பர்களாக ஏற்றுக் கொண்டு, வாழ்க்கை முழுதும் சேர்ந்து இருப்போம் என்று உறுதி ஏற்பதுதான். இருவரும் தனித்தனி நபர்களாக இருந்தாலும், அர்த்தாங்கினி எனப்படும் ஆணின் சரிபாதியாக பெண்ணை ஏற்றுக் கொள்வதுதான், இந்த சடங்கு. அதாவது, திருமண வாழ்க்கையில், இருவரும் சமமாகவும், சரிபாதியாகவும் வழி நடத்திச் செல்வது என்பதை குறிக்கிறது.இதுபோல், ஹிந்து திருமணச் சட்டத்தில், ஒவ்வொரு சடங்குக்கும் பல அர்த்தங்கள் உள்ளன. ஆனால், இந்த வழக்கில் உள்ள தம்பதியினர், அதுபோன்ற சடங்குகளை செய்யவில்லை என்று கூறியுள்ளனர். அதனால், இந்தத் திருமணம் செல்லுபடியாகாது.திருமண பந்தத்துக்குள் நுழைவது என்பது, ஹிந்து மதத்தில் மிகவும் புனிதமாகப் பார்க்கப்படுகிறது. வாழ்க்கை முழுதும் இருவரும் இணைந்து, இந்த சமூகத்துக்கான கடமைகளை நிறைவேற்ற உறுதியேற்பதுதான் திருமணமாகும். வெறும் ஆட்டம், பாட்டம், வகைவகையான விருந்து ஆகியவை மட்டும் திருமணம் அல்ல. திருமண வாழ்க்கையில் நுழைய உள்ள இளம் தலைமுறையினர், திருமணம், திருமண உறவு போன்றவற்றின் மகிமையை புரிந்துகொள்ள வேண்டும்.அப்போதுதான், தம்பதியினர் இடையே மனதளவிலும் நெருக்கம் ஏற்படும். திருமண வாழ்க்கையும் வெற்றியடையும்.இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

M S RAGHUNATHAN
மே 02, 2024 14:39

அப்படி என்றால் EVR சொன்ன, dmk சொல்லும் சீர்திருத்த திருமணம் செல்லாது என்று ஆகிறது அத்தகைய திருமணங்கள் பதிவு தவறு என்று தெரிகிறது மணமக்கள் ஹிந்து ஆக இருந்தால்


venugopal s
மே 02, 2024 11:54

சட்டத்தை நிலை நிறுத்த வேண்டியவர் மத சடங்கு சம்பிரதாயங்கள் பற்றி பேசுவது தேவையற்ற வேலை!


Sampath Kumar
மே 02, 2024 11:34

புனிதமா? இன்ட்ரெய கால கட்டத்தில் ஏதுவும் புனிதம் இல்லை


Balasubramanian
மே 02, 2024 10:34

தமிழகத்தில் சீர்திருத்த திருமணம் பற்றி (அரசியல் காரணங்களுக்காக) பேசுபவர்களும் செய்பவர்களும் அதிகம்! அத்தகைய திருமணங்களில் தகராறு ஏற்பட்டால் ( முறைப்படி செய்யும் திருமணங்களில் கூட இது நடக்கிறது) இந்த தீர்ப்பு சொல்ல வருவது என்ன? அப்படி நடந்தால் சமாதானம் செய்ய கட்சிக்காரர்கள் முன் வருவார்களா?


GoK
மே 02, 2024 09:34

வாயின் இரண்டு புறங்களிலும் பேசுவது என்பது இதுதான் இதே உச்ச நீதி மன்றம் திருமணம் புரியாமல் கூடி வாழ்ந்து பிறப்புகளை உருவாக்கி பின் பிரிந்து வாரிசு சொத்து உரிமைகள் கோரி வழக்கு தொடர்ந்து அப்போதெல்லாம் ஒன்றும் கூறாமல் இருந்து மத்திய அரசை அந்த மாதிரி கூடி வாழ்பவர்களுக்கு சட்டம் கொணருங்கள் என்று அறிவுறுத்திய இந்த நீதிமன்றமா ஹிந்துக்களின் திருமணம் சம்பிரதாய முறைப்படி நடக்க வேண்டும் என்கிறது மக்கள் பயித்தம் பிடித்து பாயப்பிரண்டும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்


muthuindian
மே 02, 2024 08:11

இந்த அறிவுரையை முதலில் நடிகர் நடிகைகளுக்கு தான் தெரிவிக்க வேண்டும் அதிலும் குறிப்பிட்டு சொல்ல போனால் நயன்தாரா சமந்தா தற்போதைய தலைமுறை மிகவும் தவறாக வழி நடத்துகிறார்கள் பெண் சுதந்திரம் என்கிற பெயரில் ஆடை குறைப்பை மட்டுமே அவர்கள் முன் வைக்கிறார்கள் மேலும் திருமண பந்தத்தை இழிவு படுத்தும் விதமாக அவர்களின் பல நடவடிக்கைகள் உள்ளன


சம்பத்
மே 02, 2024 08:01

டாஸ்மாக்கை மூடுங்கன்னு அரசுக்கு உத்தரவு போடத் தெரியலை. மூடுனா ஏராளமான குடும்பங்கள் உருப்படுமே.


jayaraman
மே 02, 2024 07:28

புனிதம் என்ற பேரில் அடிமை தனத்தை ஊக்குவிக்க கூடாது


muthuindian
மே 02, 2024 08:14

அடிமைத்தனத்திற்கும் கட்டுப்பாட்டிற்கும் உள்ள வேறுபாட்டினை அறிந்து கொள்ள வேண்டும்


குமரி குருவி
மே 02, 2024 07:22

திருமண இன்று ஓரு சடங்கு அது பந்தம் வளர்க்கும் நிகழ்வு என பலருக்கு புரிவதில்லை


R.RAMACHANDRAN
மே 02, 2024 07:00

இந்த நாட்டில் சமைய சடங்குகளை பற்றிய மூட நம்பிக்கைகள் பெருக்கல் விகிதத்தில் பெருகிவிட்டனஆனால் ஆன்மீகம் சம்பத்தப்பட்ட கருத்துக்கள் கூட்டல் விகிதத்தில் உள்ளனஆன்மீகம் என்பது ஆன்மா சம்பத்தப்பட்டது என்றெல்லாம் கூறியுள்ளார் விவேகானந்தர்ஆன்மாவை பற்றிய சிந்தனை இல்லாமல் உடல்பற்றியே சிந்தனை செய்து கொண்டிருப்பதால் வேறுபாடுகள் பிணக்குகள் உண்டாகின்றனதிருமணம் என்பது இரண்டு ஆன்மாக்கள் ஒன்று பெறுவதாக யாரும் நினைப்பது இல்லைஅப்படி நினைக்கவிடுவதும் இல்லை இந்த சமுதாயம்மாறாக திருமணம் என்பது இரண்டு உடல்கள் ஒன்றிணைவது என மாற்றப்பட்டுவிட்டதுஅதனால்தான் பிரச்சனைகள் எழுகின்றன


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை