உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / 86 வயதிலும் சுறுசுறுப்புடன் கதகளி நடனம்: இளைஞர்களை மிஞ்சிய முதியவர்

86 வயதிலும் சுறுசுறுப்புடன் கதகளி நடனம்: இளைஞர்களை மிஞ்சிய முதியவர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாலக்காடு;பாலக்காடு அருகே, 86 வயதிலும் சுறுசுறுப்புடன் கதகளி நடனமாடி கிருஷ்ணன் அசத்தினார்.கேரள மாநிலம், பாலக்காடு கதகளி நடன அறக்கட்டளையின் தலைமையில் 'குசேலவிருத்தம்' என்ற ஆன்மிக கதையை மையமாக கொண்டு, நேற்று மாலை செம்பை நினைவு அரசு சங்கீத கல்லூரியில் கதகளி நடன நிகழ்ச்சி நடந்தது.அதில், குசேலன் வேடமிட்டு அரங்கில் தோன்றினார், 86 வயதான மூலமாங்குளம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் நம்பூதிரி. கதையின் ஒவ்வொரு நிகழ்வும் மிக அருமையாக கதகளி நடனம் வாயிலாக விளக்கி பார்வையாளர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார்.இவருடன் இளம் கலைஞர்களான அபர்ணா கிருஷ்ணர் ஆகவும், ருக்மணியாக அமையாவும் வேடமிட்டு கதகளி நடனம் ஆடினர்.பெங்களூரில் வசிக்கும் கிருஷ்ணன், பாலக்காடு கதகளி அறக்கட்டளையின் உறுப்பினராவார். கதகளி நடன ஆர்வம் குறித்து கிருஷ்ணன் கூறியதாவது:சிறு வயதில் இருந்தே கதகளி நடனம் மிகவும் பிடிக்கும். கொல்லங்கோடு ராஜாஸ் மேல்நிலை பள்ளியில் படிக்கும் போது, சங்கரன்குட்டி பணிக்கரிடம் கதகளி நடனம் கற்று கொண்டேன்.தொடர்ந்து பரமசிவன் மற்றும் 'உத்தரா சுயம்வரம்' என்ற கதையில் உத்தரன் ஆகவும் 'லவணாசுரவதம்' என்ற கதையில் லவன் ஆகவும் 'தக் ஷயாகம்' கதையில் இந்திரன் மற்றும் சிவன் பெருமான் ஆகவும் வேடமிட்டு கதகளி நடனம் ஆடினேன்.அதன்பின், எல்.ஐ.சி., ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் பணியாற்றிய போது, கதகளி நடனத்தில் இருந்து விலகி இருந்தேன். கதகளி என் மூச்சு என அறிந்து மீண்டும் கதகளி நடனம் ஆட துவங்கினேன்.கடந்த ஆண்டு, பெங்களூரில் குசேலன் ஆகவும், கடந்த மே மாதம் கொல்லங்கோடு திருப்பலமுண்ட நூலக ஆண்டு விழாவில் 'பாலிவதம்' கதையில் ஸ்ரீராமர் ஆகவும் வேடமிட்டு கதகளி நடனம் ஆடினேன்.இவ்வாறு, கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ