உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / பிரேக் பிடிக்காத மகளிர் இலவச பஸ்: கல்லை போட்டு நிறுத்திய கண்டக்டர்

பிரேக் பிடிக்காத மகளிர் இலவச பஸ்: கல்லை போட்டு நிறுத்திய கண்டக்டர்

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் மகளிருக்கான கட்டணமில்லாத அரசு பஸ்சில் பிரேக் பிடிக்காமல் சென்றதால், கண்டக்டர் கல்லை போட்டு நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடலுார் மாவட்டம், விருத்தாசலம் பஸ் நிலையத்தில் இருந்து நேற்று மதியம் 2:00 மணிக்கு டி.என்.32-என்-3728 பதிவெண் கொண்ட அரசு டவுன் பஸ் (தடம் எண்-15) திட்டக்குடிக்கு புறப்பட்டது. பஸ், விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானாவை கடந்த போது, திடீரென பிரேக் பிடிக்கவில்லை. சுதாரித்த டிரைவர், பஸ்சை மெதுவாக இயக்கினார். இதனையறிந்த பெண் பயணிகள் அலறினர்.பாலக்கரை மேம்பாலத்தில் ஏறும்போது பஸ்சின் வேகம் குறைந்ததால், கண்டக்டர் இறங்கி ஓடிச் சென்று, அருகிலிருந்த கல்லை எடுத்து வந்து, பின்புற டயர்களில் வைத்து, பஸ்சை நிறுத்தினார்.இதனால் நிம்மதியடைந்த பயணிகள், பஸ்சை விட்டு இறங்கி உயிர் பிழைத்தால் போதும் என்று ஓட்டம் பிடித்தனர். அப்போது, இலவச பயணம் என்பதால், பயணிகள் மீது அக்கறை இல்லையா என பெண் பயணிகள் திட்டி தீர்த்தனர்.சில மாதங்களுக்கு முன் உளுந்துார்பேட்டை சாலையில் சென்ற மகளிர் இலவச பஸ், வயலுார் மேம்பாலத்தை கடந்தபோது கரும்புகை வெளியேறியதால், பயணிகள் இறங்கி ஓட்டம் பிடித்த சம்பவம் குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

vijay, covai
ஜூலை 14, 2024 06:46

இலவச பஸ் அப்படித்தான் இருக்கும்,இது எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாது


ஆரூர் ரங்
ஜூலை 13, 2024 18:10

இலவச எமலோகப் பயணம். விடியல் சாதனை. வாழ்க ஜெயகடா மாடல் அரசு.


ganapathy
ஜூலை 13, 2024 13:53

ஓசிக்காக காசு வாங்கினு ஓட்டு போட்டா அரசு செலவுல நிச்சியம்.


Kasimani Baskaran
ஜூலை 13, 2024 12:46

கல்லைப்போட்டு பஸ்ஸை நிறுத்தி பலரது உயிரை காத்த நடத்துனருக்கு நிச்சயம் ஜனாதிபதி விருது கொடுக்கலாம். எப்படியிருந்தாலும் பல தாய்மார்கள் வாழ்த்தியிருப்பார்கள்...


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 13, 2024 11:32

ஆண்டுதோறும் ஓட்டுனர் நடத்துனர்களுக்கு போக்கு வரத்து கழகம் சீருடைகள் வழங்குவது போல, இனி "வண்டி நிறுத்த கற்களும்" வழங்க முன் வருமா?


rasaa
ஜூலை 13, 2024 10:03

ஓசின்னா இதெல்லாம் சகஜம்மா.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 13, 2024 08:57

பஸ்சை நிறுத்திய கல் செங்கல்லா என்று ஊர்ஜிதம் செய்யவேண்டும். செங்கல்லாக இருந்தால் அதில் எ ஐ ஐ எம் எஸ் என்று எழுதி இருந்ததா என்றும் பார்க்கவேண்டும்


Kalyanaraman
ஜூலை 13, 2024 08:36

காசுக்கு ஓட்டு போட்டா இதான் நிலைமை. சாலை, குடிநீர் போன்ற மற்ற அனைத்து விஷயங்களிலும் இப்படித்தான் இருக்கும்.


VENKATASUBRAMANIAN
ஜூலை 13, 2024 08:33

இதுதான் திராவிட மாடல் அரசு


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை