உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / ஆதரவற்ற பெண்ணுக்கு கன்யாதானம் உடுப்பி கலெக்டரின் பாசம்

ஆதரவற்ற பெண்ணுக்கு கன்யாதானம் உடுப்பி கலெக்டரின் பாசம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

உடுப்பி, : ஆதரவற்ற இல்லத்தில் தங்கியிருந்த இளம்பெண்ணுக்கு பெற்றோர் ஸ்தானத்தில் இருந்து கலெக்டரே திருமணம் செய்து வைத்த சம்பவம், கர்நாடக மாநிலத்தில் நடந்தது.கர்நாடகா மாநிலம் ஷிவமொகா மாவட்டம், தீர்த்தஹள்ளியைச் சேர்ந்தவர் தினேஷ். இவரது மகன் மதுராஜ், 29. 'கேட்டரிங்' தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணம் செய்து வைக்க, பெற்றோர் முடிவு செய்தனர்.ஆனால், ஆதரவற்ற பெண்ணை திருமணம் செய்ய விரும்புவதாக மதுராஜ் தெரிவித்தார். அவரின் பெற்றோரும், மகனின் முடிவுக்கு சம்மதம் தெரிவித்தனர்.இதையடுத்து, உடுப்பி மாவட்டம் நிட்டூரில் உள்ள அரசு மகளிர் காப்பகத்திற்கு சென்று பெற்றோர் பேசினர். குஷ்பு சுமேராவை, 21, திருமணம் செய்து கொள்ள மதுராஜ் விருப்பம் தெரிவித்தார்.உடுப்பி மாவட்ட நிர்வாகம், மாவட்ட மகளிர் குழந்தைகள் காப்பக துறை, அரசு மகளிர் விடுதி இணைந்து அரசின் விதிகளின்படி நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.குஷ்புவுக்கும், மதுராஜுக்கும் நேற்று முன்தினம் திருமணம் நடத்த முடிவானது. மணமகள் குஷ்புவின் பெற்றோர் ஸ்தானத்தில், மாவட்ட கலெக்டர் வித்யாகுமாரி பொறுப்பேற்று கன்யாதானம் செய்து திருமணம் நடத்தி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி