உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / கோயிலுக்கு நிலமளித்த இஸ்லாமியர்: கும்பாபிஷேகத்திற்கு சீர் வரிசையுடன் வருகை

கோயிலுக்கு நிலமளித்த இஸ்லாமியர்: கும்பாபிஷேகத்திற்கு சீர் வரிசையுடன் வருகை

காங்கேயம் : காங்கேயம் அருகே விநாயகர் கோயில் கட்ட நிலம் வழங்கிய இஸ்லாமியர்கள், கும்பாபிஷேக விழாவுக்கு, சீர்வரிசை வழங்கினர்.திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தை அடுத்த படியூர், ஓட்டப்பாளையம் ரோஸ் கார்டன் பகுதியில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்துக்கள் மட்டுமின்றி இஸ்லாமியர்களும் உள்ளனர். இப்பகுதியில் விநாயகர் கோயில் கட்ட தீர்மானிக்கப்பட்டது. போதிய இடம் இல்லாத நிலையில், அதே பகுதியில் ஆர்.எம்.ஜே.ரோஸ் கார்டன் முஸ்லிம் ஜமாத் பள்ளிவாசலுக்கு சொந்தமான, மூன்று சென்ட் நிலத்தை, இஸ்லாமியர்கள் கோவிலுக்கு வழங்கினர். இதன் மதிப்பு ஆறு லட்சம் ரூபாய். இதையடுத்து, கோயில் கட்டும் பணி நடந்து முடிந்தது. நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதற்காக பள்ளிவாசலில் இருந்து ஐந்து தட்டுகளில் சீர்வரிசை பொருட்களை எடுத்து, ஊர்வலமாக வந்து கோவிலுக்கு வழங்கினர். விழாவில் அன்னதானமும் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

R.RAMACHANDRAN
மே 28, 2024 08:55

தெய்வம் என்பது எல்லோர் உள்ளேயும் உள்ளது வெளியேயும் உள்ளது.அதற்கு அவர்கள் ஒரு பெயரிட்டு பக்தி என்ற பெயரில் அதனை ஒரு கட்டுக்குள் கொண்டு வரும் விதத்தில் மத அடிப்படையில் பிரிந்து சண்டையிட்டுக் கொள்கின்றனர்.அது எந்த மதத்திற்கும் சொந்தமானது இல்லை.அது எல்லோருக்கும் பொதுவான ஒன்று.


கத்தரிக்காய் வியாபாரி
மே 27, 2024 18:21

வாழ்க பாரதம். விநாயகர் அருள் அனைவருக்கும் கிடைக்கும்.


raja
மே 27, 2024 16:55

சேர சோழ பாண்டியர் அரச காலத்தில் தமிழகத்தில் என்ற மக்களும் இல்லை..


Lion Drsekar
மே 27, 2024 16:45

இந்திய மக்கள் நிறைக்கும் எல்லா இடங்களிலும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள் அவருக்கு காசுகொடுத்துவிட்டு சென்றதை மாம்பழம் இரயில் நிலைய நடைபாளத்தில் கண்டேன்


சேஷு
மே 27, 2024 11:49

வெல்லப்பிள்ளையாரைக் கிள்ளி பிள்ளையாருக்கே குடுத்தாங்களாம். புள்ளையாரும் சாப்புட்டு டாங்ஸ் சொன்னாராம்.


RAMAKRISHNAN NATESAN
மே 27, 2024 11:02

இதெல்லாம் மோடி எபெக்ட் .....


W W
மே 27, 2024 10:19

நல்ல உள்ளங்களுக்கு நன்றி வழ்த்துக்கள்


Malarvizhi
மே 27, 2024 09:40

சூப்பர் இஸ்லாமிய சகோதரர்களே. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. உங்களை ஓட்டுவங்கியாக தக்கவைத்துக்கொள்ள தில்லாலங்கடி செய்பவர்களை அடையாளம் காணுங்கள்.


V RAMASWAMY
மே 27, 2024 09:05

ஆளும் ஆட்சி கவனிக்கவில்லையா? ஒரு முத்திரை குத்திவிடுவார்களே, இது தான் திராவிட மாடல் என்று?


karthik
மே 27, 2024 08:45

ஆதியில் இடம் அளித்ததே இந்துக்கள் தான்..


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி