உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / 5 வயது சிறுமிக்கு வினோத நோய்; தவிக்கும் ஏழை பெற்றோர்

5 வயது சிறுமிக்கு வினோத நோய்; தவிக்கும் ஏழை பெற்றோர்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே பின்னவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன், 39, தச்சுத் தொழலாளி. இவரது மனைவி பிரியதர்ஷினி, 28. இவர்களின் மகள் காருண்யா, 5. குழந்தை பிறந்த இரண்டு மாதத்தில், 'மஞ்சள் காமாலை நோய் பாதிப்பால், குழந்தையின் ரத்தம் முறிந்து விட்டது. வேறு ரத்தம் மாற்ற வேண்டும்' என, டாக்டர்கள் கூறினர். புதிய ரத்தம் செலுத்தப்பட்ட பிறகும் குழந்தைக்கு பாதிப்பு சரியாகவில்லை. தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு குழந்தையை பரிசோதனை டாக்டர்கள், 'ஹீமோலிட்டிக் அனீமியா' எனும், பாதிப்பு இருப்பதை கண்டறிந்தனர். மேலும், குழந்தைக்கு அன்றில் இருந்து தற்போது வரை, 20 நாட்களுக்கு ஒரு முறை புதிய ரத்தம் செலுத்தி வருகின்றனர்.சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது, 'குழந்தைக்கு பூரண உடல் நலம் கிடைக்க குறைந்தது, 30 லட்சம் ரூபாய் வரை செலவாகும்' என்றனர். என்ன செய்வது எனத் தெரியாமல் குழந்தையின் பெற்றோர் தவிக்கின்றனர்.குழந்தையின் பெற்றோர் கூறியதாவது: உடல் நலக்குறைவு காரணமாக குழந்தையை பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை. குழந்தையின் மருத்துவச் செலவு எங்களால் தாங்க முடியாத அளவுக்கு உள்ளது. எனவே, தமிழக அரசு குழந்தையின் உயிரை காப்பாற்ற, உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.உதவிக்கு தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்: கண்ணன்: 6385240427


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Saravanan D
ஆக 03, 2024 08:52

my email id md.saravanan@gmail.com


Saravanan D
ஆக 03, 2024 08:47

I've spoken to Mr Kannan before sending some money. He needs a proper medical guidance on what to do next and where to go for permanent remedy. Can Dinamalar arrange someone to help him?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை