உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / வாலிபரை திருநங்கையாக மாற்றிய 5 பேருக்கு வலை

வாலிபரை திருநங்கையாக மாற்றிய 5 பேருக்கு வலை

பெங்களூரு: பெங்களூரில், வாலிபரை கடத்தி பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து, திருநங்கையாக மாற்றிய ஐந்து திருநங்கையரை போலீசார் தேடி வருகின்றனர்.கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள மைசூரு சதுக்கம் பகுதியைச் சேர்ந்த 25 வயது வாலிபர், குடும்ப வறுமையால் டீக்கடையில் வேலை செய்தார். டீக்கடைக்கு அடிக்கடி வந்து சென்ற திருநங்கையரான சித்ரா, அஸ்வினி, காஜல், ப்ரீத்தி, முகிலா ஆகிய ஐந்து பேரும் வாலிபரிடம் சகஜமாக பேசினர்.குடும்ப வறுமை குறித்து வாலிபர் கூறினார். தங்களுடன் வந்தால் அதிக பணம் கிடைக்கும் என்று திருநங்கையர் கூறினர். ஆனால், அவர்களுடன் செல்ல வாலிபர் மறுத்து விட்டார்.கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வாலிபரை, திருநங்கையர் கடத்தி சென்றனர். ஒரு வீட்டில் சிறை வைத்து தாக்கினர். ரவுடிகள் உதவியுடன் வாலிபரை மிரட்டினர். 'தினமும் எங்களுக்கு பணம் தர வேண்டும். இல்லாவிட்டால் உன் பெற்றோரை கொன்று விடுவோம்' என, வாலிபரை மிரட்டி விடுவித்தனர். பயந்து போன வாலிபர் தினமும் திருநங்கையருக்கு பணம் கொடுத்து வந்தார்.இந்நிலையில், கடந்த மாதம் 31ம் தேதி வாலிபரை, திருநங்கையர் மீண்டும் கடத்தி சென்றனர். டானரி சாலையில் ஒரு வீட்டில் வைத்து, வாலிபருக்கு மயக்க ஊசி செலுத்தினர். பின், பாலின அறுவை சிகிச்சை செய்து அவரையும் திருநங்கையாக மாற்றினர். அவரது அந்தரங்க உறுப்புகளை புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.மயக்கம் தெளிந்து எழுந்த வாலிபர், தன்னை திருநங்கையாக மாற்றியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். திருநங்கையரிடம் வாக்குவாதம் செய்தார். அப்போது, புகைப்படங்களை காட்டி, 'சமூக வலைதளங்களில் வெளியிடுவோம்' என, திருநங்கையர் மிரட்டினர்.சிறை வைக்கப்பட்டிருந்த வீட்டில் இருந்து சில தினங்களுக்கு முன்பு வாலிபர் தப்பினார். பெற்றோரிடம் சென்று நடந்ததை கூறி கதறி அழுதார். பின், திருநங்கையர் ஐந்து பேர் மீதும் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள ஐந்து திருநங்கையரையும் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை