உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / இளைஞர் உடல் உறுப்பு தானம்: ஏழு பேருக்கு மறுவாழ்வு 

இளைஞர் உடல் உறுப்பு தானம்: ஏழு பேருக்கு மறுவாழ்வு 

சென்னை : சென்னை மணலி புதுநகரை சேர்ந்தவர் மகேஷ், 33. மின் சக்தி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனர். கடந்த, 5ம் தேதி பிற்பகல், 3:10 மணியளவில் தன் நண்பரை அவரது வீட்டில் இறக்கி விட்டு, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினார். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கீழே விழுந்ததில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.அங்கிருந்தவர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, 11:40 மணியளவில் அவர் மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகளை தானமளிக்க உறவினர்கள் முன்வந்தனர். அவரது உடலில் இருந்து எடுக்கப்பட்ட கல்லீரல், இரண்டு சிறுநீரகம், இதய வால்வு, தோல், இரண்டு கண்கள் என, ஏழு உறுப்புகள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும், ஐந்து நோயாளிகளுக்கும், தனியார் மருத்துவமனைகளில் இரண்டு நோயாளிகளுக்கும் பொருத்தப்பட்டன.விபத்தில், இதயம் மற்றும் நுரையீரல் பாதிக்கப்பட்டு இருந்ததால், அவற்றை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதாக, மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவரது உடலுக்கு மருத்துவமனை தரப்பில் அரசு மரியாதை செலுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

tata sumo
மே 10, 2024 20:04

rest in peace bro


Thirumal s S
மே 09, 2024 16:36

உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இந்த சமுதாயத்தின் நன்றிவணக்கம்


Somasundaram S
மே 10, 2024 16:28

only Hindus donate organs. all other enjoy


Bvanandan
மே 09, 2024 10:12

Even in Death you are Great God Bless your Family


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை