உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / 17 வயது மாணவனுடன் ஓட்டம்; 27 வயது பெண் மீது போக்சோ

17 வயது மாணவனுடன் ஓட்டம்; 27 வயது பெண் மீது போக்சோ

திருவனந்தபுரம்; கேரளாவில் பிளஸ் 1 மாணவனுடன் ஓட்டம் பிடித்த, 27 வயது இளம்பெண்ணை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம், ஆலப்புழா அருகே சேர்த்தலா பள்ளிபுரத்தை சேர்ந்தவர் சனுஷா, 27; திருமணமாகாதவர். சில மாதங்களுக்கு முன் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். அப்போது குத்தியதோடு பகுதியை சேர்ந்த துாரத்து உறவினரான பிளஸ் 1 படிக்கும், 17 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் மொபைல் போனில் பேசி, பழகினர். இரு நாட்களுக்கு முன் இருவரும் வீட்டில் இருந்து மாயமாகினர். சிறுவனின் பெற்றோர், இளம் பெண்ணின் பெற்றோர் தனித்தனியாக போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்திய நிலையில், உறவினர் ஒருவருடன் சிறுவன், 'வாட்ஸாப்' அழைப்பில் பேசியுள்ளார். இதைத்தொடர்ந்து, அவர் கர்நாடக மாநிலம், கொல்லுாரில் இருப்பது தெரிந்தது. போலீசார் அங்கு சென்று, லாட்ஜில் தங்கி இருந்த இருவரையும் மீட்டு அழைத்து வந்தனர். சனுஷா மீது போலீசார் போக்கோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கொட்டாரக்கரை பெண்கள் சிறையில் அடைத்தனர். சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Vijay D Ratnam
செப் 03, 2025 15:03

ஒரு வருஷம் கழித்து ஓடி இருக்கலாம்ல. இப்போ பாரு போக்ஸோல உள்ள போற மாதிரி ஆயிடுச்சில்ல. அடக்கம் அமரருள் உய்க்கும். அடங்காமை ஆரிருள் உய்த்து விடும். இந்தா உய்த்து உட்டுடுச்சில்ல


நிக்கோல்தாம்சன்
செப் 03, 2025 12:29

வைக்கம் புரட்சி போல இதுவும்


Natchimuthu Chithiraisamy
செப் 03, 2025 12:23

துரத்து ஆம்னி பஸ்சில் சென்று திரும்பும் பழக்கமோ என்னவோ அதற்குள் அவசரப்பட்டு விட்டார்கள்


Sangi Mangi
செப் 03, 2025 11:36

நம்மளை யாரும் இப்படி கூட்டிகிட்டு போகல, ச்சேய் என்ன பொழப்புடா இது...


VENKATASUBRAMANIAN
செப் 03, 2025 08:17

கலாச்சார சீரழிவு.


சமீபத்திய செய்தி