உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / 300 சொகுசு கார்கள், ஜெட் விமானங்கள் மலேஷிய மன்னரின் ராஜபோக வாழ்க்கை

300 சொகுசு கார்கள், ஜெட் விமானங்கள் மலேஷிய மன்னரின் ராஜபோக வாழ்க்கை

கோலாலம்பூர்: மலேஷியாவின் புதிய மன்னராக பொறுப்பேற்றுள்ள சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தர், 300 சொகுசு கார்கள், ஏராளமான ஜெட் விமானங்கள் மற்றும் சொந்தமாக ராணுவப் படை வைத்துள்ளது, சர்வதேச அளவில் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான மலேஷியா கடந்த 1957ல் சுதந்திரம் பெற்றது முதல், தேர்தல்கள் நடத்தப்பட்டு பிரதமர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். இருப்பினும், அங்கு இன்னும் மன்னராட்சி நீடித்து வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=o2kahtix&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அந்த வகையில், நாட்டின் 17வது மன்னராக ஜோகூர் அரசக் குடும்பத்தைச் சேர்ந்த சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தர் பொறுப்பேற்றுள்ளார். மன்னர் சுல்தானுக்கு, 47,000 கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ளது தெரிய வந்துள்ளது. நிலம், சமையல் எண்ணெய், ரியல் எஸ்டேட், தொலை தொடர்பு, சுரங்கத் தொழில் என பல்வேறு துறைகளில் முதலீடு செய்துள்ளார். மலேஷியாவின் முக்கிய மொபைல் போன் நிறுவனங்களில் ஒன்றான, 'யு மொபைல்' நிறுவனத்தில் இவருக்கு 24 சதவீத பங்குகள் உள்ளன. சுல்தான் இப்ராஹிமின் அலுவலக ரீதியான இல்லமான 'இஸ்தானா புக்கிட் செரீன்'லில் 300க்கும் மேற்பட்ட சொகுசு கார்கள் உள்ளன. அவற்றில் ஒன்று, சர்வாதிகாரி ஹிட்லர் பரிசளித்தது. தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான 'போயிங் 737' உள்ளிட்ட ஜெட் விமானங்களும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இவரின் சொத்துக்கள் மற்றும் குடும்பத்தினரின் பாதுகாப்புக்காக தனியார் ராணுவமும் இயங்கி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Vemal
பிப் 02, 2024 09:59

மற்றும் ஒரு தகவல்... மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அவர்களின் மகன், பட்டத்து இளவரசர் Tunku Ismail அவர்கள் இந்திய இராணுவத்தில் பணிபுரிந்தவர்.. 2007 இந்திய குடியரசு தின அணிவகுப்பில் Jaipur's 61 Calvary படைப்பிரிவுக்கு Captain ஆக தலைமையேற்று அணிவகுத்தார்


g.s,rajan
பிப் 01, 2024 21:11

இந்தியா ஒரு ஏழை நாடு,ஆனால் இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகள் மிகப் பெரும் கோடீஸ்வரர்கள், மக்களின் வரிப்பணத்தை செலவு செய்வதில் அசகாய சூரர்கள் ...


Vemal
பிப் 01, 2024 17:04

மன்னரின் தனி ராணுவ போலிஸ் படை Johor அரச குடும்பத்தினுடையது


HoneyBee
பிப் 01, 2024 14:38

திராவிட மாடலா அப்புசாமி...


அப்புசாமி
பிப் 01, 2024 08:00

இங்கேயும் சொகுசு விமானம், அஞ்சடுக்கு 22000 போலுஸ் பாதுகாப்புன்னு இருக்காங்க.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ