உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல /  கரூரில் ஒரு கிலோ உப்பு 26,000 ரூபாய்க்கு ஏலம், நோன்பு திருவிழாவில் ருசிகரம்

 கரூரில் ஒரு கிலோ உப்பு 26,000 ரூபாய்க்கு ஏலம், நோன்பு திருவிழாவில் ருசிகரம்

கரூர்: கரூரில் நடந்த, பிள்ளையார் நோன்பு திருவிழாவில், ஒரு கிலோ உப்பு, 26,000 ரூபாய்க்கு ஏலம் போன ருசிகர சம்பவம் நடந்துள்ளது. கரூர் நகரத்தார் சங்கம் சார்பில், 39வது பிள்ளையார் நோன்பு விழா, கரூரில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. அதன்படி நேற்று முன்தினம் இரவு, நோன்பு நிறைவு நாள் நடந்தது. அதில், 500க்கும் மேற்பட்டவர்கள் நோன்பு களைந்தனர். தொடர்ந்து மங்கல பொருட்கள் ஏலம் நடந்தது. அதில், ஒரு கிலோ உப்பு, 26,000 ரூபாய், ஹேண்ட் பேக், 10,500 ரூபாய், பூஜை தேங்காய், மணமாலை, வாழைப்பழம் உட்பட, 20க்கும் மேற்பட்ட மங்கல பொருட்கள், ஒரு லட்சத்து, 70,000 ரூபாய்க்கு ஏலம் போனது. நோன்பு திருவிழாவில் ஏலம் எடுத்தால், வேண்டுதல்கள் அடுத்த பிள்ளையார் நோன்புக்குள் நிறைவேறும் என்பது ஐதீகம். இதனால், மங்கல பொருட்கள் ஏலம் விறுவிறுப்பாக நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி