உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / உதயநிதி விழாவில் பிக்பாக்கெட்; வக்கீலிடம் ரூ.50,000 அபேஸ்

உதயநிதி விழாவில் பிக்பாக்கெட்; வக்கீலிடம் ரூ.50,000 அபேஸ்

புதுக்கோட்டை: புதுக்கோட்டைக்கு நேற்று முன்தினம் துணை முதல்வர் உதயநிதி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்தார். புதுக்கோட்டை நகரில், கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றார்.இதில், தன் மனைவியுடன் பங்கேற்ற தி.மு.க., வழக்கறிஞர் ஒருவர், உதயநிதியுடன் போட்டோ எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டார். தன் மனைவியிடம் மொபைல் போனை கொடுத்து போட்டோ எடுக்குமாறு கூறிவிட்டு மேடைக்கு சென்றார்.போட்டோ எடுத்து விட்டு, மேடையை விட்டு கீழே இறங்கியபோது, பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்த, 50,000 ரூபாய் பிக்பாக்கெட் அடிக்கப்பட்டது தெரிந்து அவர் அதிர்ச்சிஅடைந்தார். டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

c.mohanraj raj
மே 26, 2025 21:59

யாரு கூட்டத்திற்கு போகிறோம் என்று அக்கறை கூட இல்லாமல் அறிவு கூட இல்லாமல் சென்றால் இப்படித்தான் போகிறது விடுங்கள் ஐம்பதாயிரம் தானே


சிந்தனை
மே 26, 2025 15:54

பாவம் பொய் சொல்லி சம்பாதித்த பணம் இப்படி திருடன் கிட்ட போயிடுச்சு


lana
மே 26, 2025 11:03

ஆமா காவல்துறை ஐ நடவடிக்கை எடுக்க விட்டு விட்டு தான் வேலை பார்ப்பவர்கள் இந்த விடியல் அரசு. sticker ஓட்ட மட்டும் விடியல் அரசு. தப்பு செய்தால் காவல்துறை பொறுப்பு. துப்பு கெட்ட அரசு இருந்தால் இப்படித்தான். காவல்துறை க்கு அப்பா தான் பொறுப்பு என்பதை உடன் பருப்பு உணர வேண்டும்


Padmasridharan
மே 26, 2025 09:54

அவ்வளவு பணத்தை ஏன் அங்கு அப்படி கொண்டுவந்தார் அய்யா.. இதுக்கும் இப்ப மற்ற கட்சி உறுப்பினர்கள் இந்த கட்சியை குறை கூறுமே தவிர குற்றவாளிகளை அதிகப்படுத்திய காவலர்களை விட்டுவைப்பார்கள்


முக்கிய வீடியோ