மேலும் செய்திகள்
குழந்தைக்குள் ஒரு குழந்தை ஹூப்பள்ளியில் ஆச்சரியம்
03-Oct-2025 | 1
மஹாராஷ்டிரா அரசு பள்ளிக்கு உலகின் சிறந்த பள்ளிக்கான விருது
02-Oct-2025 | 1
வக்கீலாக தடம் பதித்த முதல் பழங்குடியின பெண்
25-Sep-2025 | 1
அயோத்தி, ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, அயோத்தியில் முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே பங்கேற்கும் 'ஸ்ரீ ராம லீலா' நாடகம், அடுத்த 11 நாட்களுக்கு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை ஒட்டி, அயோத்தி நகரம் திருவிழா கோலம் பூண்டுள்ளது. காணும் இடமெல்லாம் ராமர், சீதை, ஹனுமன் ஆகியோரின் உருவங்கள் பல்வேறு வடிவங்களில் காட்சியளிக்கின்றன. ராமர் பாடல்களும், பஜனைகளும் அயோத்தி முழுதும் ஒலித்தவண்ணம் உள்ளன. இந்நிலையில், கும்பாபிஷேகத்தை ஒட்டி, 'ஸ்ரீ ராம லீலா' எனப்படும் ராமரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் ராமாயணத்தை நாடகமாக அரங்கேற்ற, அங்கு அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, மஹாராஷ்டிரா, ஹிமாச்சல பிரதேசம், ஹரியானா, கேரளா, கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து நாடக கலைஞர்கள் அயோத்தியில் குவிந்துள்ளனர். உத்தரகண்டைச் சேர்ந்த முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே இடம் பெற்றுள்ள குழுவினரும் ஸ்ரீ ராம லீலா நடத்த அயோத்தி வந்துள்ளனர். மொத்தம் 50 பேர் கொண்ட இந்த குழுவில் உள்ள பெண்களே, நாடகத்தின் பிரதான கதாபாத்திரங்களான ராமர், ராவணன் ஆகியவற்றில் தோன்ற உள்ளனர். நேற்று துவங்கி, அடுத்த 11 நாட்கள் இந்த குழுவினரின் ஸ்ரீ ராம லீலா நடத்த உ.பி., அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்து நிகழ்ச்சி அமைப்பாளர் கூறுகையில், 'சனாதன தர்மத்தை முன்னோக்கி எடுத்துச் செல்வதே எங்கள் நோக்கம். ராமரின் கதையை நாடு முழுதும் பல இடங்களில் நடத்தியுள்ளோம். ஆனால், அயோத்தியில் நடத்துவது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.'நாங்கள் நடத்தும் நாடகத்தில் அனைத்து கதாபாத்திரங்களையும் பெண்களே ஏற்று நடிக்கின்றனர்' என தெரிவித்தனர். ஸ்ரீ ராம லீலா நாடகத்தை பொதுமக்கள் சிரமமின்றி பார்வையிடுவதற்கும் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
03-Oct-2025 | 1
02-Oct-2025 | 1
25-Sep-2025 | 1