உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல /  இஸ்ரோ குறித்து 225 அடி நீளத்திற்கு கடிதம் எழுதி விவசாயி அசத்தல்

 இஸ்ரோ குறித்து 225 அடி நீளத்திற்கு கடிதம் எழுதி விவசாயி அசத்தல்

காரைக்குடி: அரியக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில், தேசிய கடித தினத்தை முன்னிட்டு, விவசாயி ஒருவர் 'இஸ்ரோ' குறித்து எழுதிய, 225 அடி நீள வண்ண கடிதத்தை மாணவர்கள் வெளியிட்டனர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்தவர் சின்னப்பெருமாள், 53; விவசாயி. பத்தாம் வகுப்பு படித்துள்ளார். பொது பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை வண்ண எழுத்துக்களாலும், பல்வேறு வடிவிலும் எழுதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி, தீர்வு கண்டு உள்ளார். உலக கடித தினத்தை முன்னிட்டு, தமிழ்த்தாய் வடிவில் கடிதம் எழுதி, 53 கி.மீ., துாரம் நடந்து சென்று தன் தாய்க்கு கடிதத்தை வழங்கி பாராட்டுக்களை பெற்றவர். தற்போது, தேசிய கடித தினத்தை முன்னிட்டு, இஸ்ரோ துவங்கப்பட்ட நாளிலிருந்து, 'சந்திரயான் 3' நிலவின் தென்துருவத்தை அடைந்தது வரை, இஸ்ரோவின் சாதனைகளை 225 அடி நீளத்தில் எழுதியுள்ளார். நேற்று அரியக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில், தலைமை ஆசிரியர் ஜான்பிரிட்டோ முன்னிலையில் மாணவர்கள் கடிதத்தை வெளியிட்டனர்.

சின்னப்பெருமாள் கூறியதாவது:

இதுவரை, 7,800 கடிதங்கள் எழுதியுள்ளேன். தேசிய கடித தினத்தை முன்னிட்டு, இஸ்ரோவை மையப்படுத்தி இரவு நேரங்களில் மட்டும் எழுத துவங்கினேன். 115 பேனாக்கள் மூலம் 180 நாட்கள் கடிதத்தை எழுதினேன். கடிதம் எழுதும் பழக்கத்தை மீட்டெடுக்க, இன்றைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல, இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்ட, மாணவர்களான இளம் விஞ்ஞானிகளை ஊக்குப்படுத்த இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை