உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / காளியம்மன் கோயில் விழாவில் பக்தர்களை வரவேற்ற ஜமாத்தார்

காளியம்மன் கோயில் விழாவில் பக்தர்களை வரவேற்ற ஜமாத்தார்

தொண்டி, - காளியம்மன் கோயில் திருவிழாவில் பக்தர்களுக்கு முஸ்லிம் ஜமாத் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.தொண்டி அருகே மத ஒற்றுமைக்கு எடுத்துகாட்டாக கிராமங்களில் நடைபெறும் திருவிழாக்களில் ஹிந்துக்கள், முஸ்லிம்கள் சார்பில் வரவேற்பு டிஜிட்டல் போர்டுகள் வைப்பது வழக்கமாக உள்ளது. கடந்த ஜூலையில் பாசிபட்டினத்தில் அமைந்துள்ள சர்தார் நைனா முகமது ஒலியுல்லா தர்காவில் சந்தனக்கூடு திருவிழா விமரிசையாக நடந்தது. இதில் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டனர்.விழாவில் ஹிந்துக்கள் சார்பில் டிஜிட்டல் வரவேற்பு போர்டுகள் ஆங்காங்கே வைக்கப்பட்டன. இதே போல் எம்.வி.பட்டினத்தில் சிங்கமுக காளியம்மன் கோயில் திருவிழா செப்.10ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் காவடி எடுத்து, பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தினர். அன்னதானம், இரவில் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.இந்த திருவிழாவில் பக்தர்கள், ஊர் பொதுமக்களை வரவேற்கும் விதமாக எம்.வி.பட்டினம் முஸ்லிம் ஜமாத் தக்வா சேவைக் குழு சார்பில் டிஜிட்டல் போர்டு வைக்கப்பட்டது. மத ஒற்றுமைக்கு எடுத்துகாட்டாக படங்கள் இருந்தன. விழாவிற்கு வந்தவர்கள் இந்த வரவேற்பை போர்டை பார்த்து மகிழ்ச்சியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Azar Mufeen
செப் 20, 2024 22:44

விநாயகர் சதுர்த்திக்கு கொடுத்த பொங்கல் பிரசாதத்தையும், ஆடி மாதம் அம்மன் கோவில் கூழயும் குடித்திருக்கிறேன்


ஆரூர் ரங்
செப் 20, 2024 12:07

அம்மனின் பிரசாதம் அன்னதான உணவை உண்டு மதசார்பின்மையை வெளிக்காட்ட வேண்டும்.


முக்கிய வீடியோ