வாசகர்கள் கருத்துகள் ( 1 )
திடீரென்று ஜவகல் ஸ்ரீநாத் பற்றி செய்தி வந்தவுடன் நான் என்னமோ ஏதோ என்று பயந்துவிட்டேன்.
கர்நாடகா பல விளையாட்டு வீரர்களை, நாட்டுக்கு கொடுத்துள்ளது. பலரும் சர்வதேச அளவில் இந்தியாவின் பெருமையை உயர்த்தினர். அவர்களில் ஜவகல் ஸ்ரீநாத்தும் ஒருவர்.ஹாசனை சேர்ந்த ஜவகல் ஸ்ரீநாத், 1969 ஆகஸ்ட் 31ல் பிறந்தவர்; பொறியியல் பட்டதாரி. கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட இவர், 1990ல் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அதே ஆண்டு ஒரு நாள் போட்டியிலும் ஆடினார். இந்தியாவின் முக்கியமான வேக பந்து வீச்சாளராக இருந்தவர். கிரிக்கெட் ரசிகர்கள் இவரை, 'மைசூரு எக்ஸ்பிரஸ்' என, அழைத்தனர்.இந்திய அணியில் ஆடியதுடன், கர்நாடகா சார்பில் ரஞ்சி கிரிக்கெட் உட்பட பல்வேறு அணிகளுக்காக விளையாடினார். 2003ல் இவர் ஓய்வு பெறுவதற்கு முன், இந்தியாவின் முக்கியமான வேகப்பந்து வீச்சாளராக இருந்தார். பல போட்டிகளில் பேட்ஸ்மேனாகவும் விளையாடி, ரன்களை குவித்துள்ளார்.டெஸ்ட் போட்டிகளில், 236 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் 315 விக்கெட்டுகள் எடுத்தவர். இவருக்கு சர்வதேச கிரிக்கெட் ஆணையம், 'மேட்ச் ரெபரி' என்ற விருது வழங்கியது. மத்திய அரசு, 'அர்ஜுனா' விருது வழங்கி கவுரவித்தது. பல உலக கோப்பை போட்டிகளில் பங்கேற்றார். தென்னாப்பிரிக்காவில் 2003ல், உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடிய இவர், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். தற்போது ஐ.சி.சி., போட்டிகளில் நடுவராக இருக்கிறார் - நமது நிருபர் -.
திடீரென்று ஜவகல் ஸ்ரீநாத் பற்றி செய்தி வந்தவுடன் நான் என்னமோ ஏதோ என்று பயந்துவிட்டேன்.