உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / சிறுமூளை பாதிப்பு கருணைப்பார்வைக்காக காத்திருக்கிறார் காவ்யஸ்ரீ

சிறுமூளை பாதிப்பு கருணைப்பார்வைக்காக காத்திருக்கிறார் காவ்யஸ்ரீ

கோவை; கோவைப்புதுார் தனியார் கல்லுாரியை சேர்ந்த மாணவி காவ்யஸ்ரீ , 19. மூன்றாமாண்டு பி.சி.ஏ., ஐ.டி., படித்து வரும் இவருக்கு, சிறுமூளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.அரசு மருத்துவமனையில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இச்சூழலில், கண் நரம்பும் பாதிக்கப்பட்டு, கல்வியை தற்காலிமாக தொடர முடியாத சூழலில் உள்ளார். குடும்ப பொருளாதார சூழல் காரணமாக, மருத்துவ செலவுக்கு நிதியுதவி எதிர்பார்க்கிறார். காந்திபார்க் பகுதியை சேர்ந்த காவ்யஸ்ரீ, கடந்த சில மாதங்களாக தொடர் தலைவலி, கண் பார்வை சிக்கலால் பாதிக்கப்பட்டு இருந்தார்.கடந்த, ஜன., மாதம் வாந்தி, தலைவலி அதிகமானதுடன், திடீரென்று மயங்கி விழுந்துள்ளார். கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, சிறுமூளையில் கட்டி இருப்பது தெரிந்து, அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சை முடிந்து சற்று உடல் நலம் தேறிவரும் சூழலில், தற்போது மீண்டும் பார்வையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பரிசோதித்தபோது, கண் நரம்பில் பாதிப்பு இருப்பதாக, டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து சிகிச்சை எடுத்தால் மட்டுமே, பார்வையை காப்பாற்ற இயலும் என்பதால், நிதியுதவி கோரியுள்ளனர். இதுகுறித்து, தாய் விஜயலட்சுமி கூறியதாவது:கணவர் இல்லை. சமையல் வேலைக்கு சென்று பிள்ளைகளை படிக்கவைக்கின்றேன். என் மகளால் தற்போது, சரியாக நடக்கவோ, பார்க்கவோ முடியவில்லை. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும், 50 நாட்கள் பணிக்கு செல்லாமல், பிற மருத்துவ செலவுகளையும் கடன் வாங்கி கவனித்து வந்தேன்.தற்போது, கண்பார்வையும் பாதிக்க துவங்கிவிட்டது. இதற்கு மேல் செலவிட ஒன்றும் இல்லாமல் நிற்கின்றோம். நான் வாங்கும் தினக்கூலி, சாப்பாட்டுக்குதான் சரியாக இருக்கும்.என் மகளின் பார்வையை சரி செய்ய பரிசோதனை, சிகிச்சை போன்ற செலவுகளுக்கு கருணை உள்ளம் கொண்டவர்கள் உதவினால், அவளின் எதிர்காலத்தை காப்பாற்றி விடுவேன். இவ்வாறு, அவர் கூறினார். இவர்களுக்கு உதவி செய்ய விரும்புவோர், 93427-16464 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இதற்கு மேல் செலவிட ஒன்றும் இல்லாமல் நிற்கின்றோம். நான் வாங்கும் தினக்கூலி, சாப்பாட்டுக்குதான் சரியாக இருக்கும். என் மகளின் பார்வையை சரி செய்ய பரிசோதனை, சிகிச்சை போன்ற செலவுகளுக்கு கருணை உள்ளம் கொண்டவர்கள் உதவினால், அவளின் எதிர்காலத்தை காப்பாற்றிவிடுவேன்.

தேர்வு எழுதுவேன்: காவ்யஸ்ரீ நம்பிக்கை

காவ்யஸ்ரீ கூறுகையில், '' ஏப்., மாதம் தேர்வை எழுதி படிப்பை முடித்து இருக்கவேண்டும். ஆனால், உடல் நிலை ஒத்துழைக்கவில்லை. கடந்த ஜன., முதல் கல்லுாரிக்கு செல்லவில்லை. நவ., மாதம் தேர்வை கட்டாயம் எழுதுவேன். என் மருத்துவத்திற்கு உதவி கிடைத்தால், மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி, படிப்பை முடிக்கவேண்டும் என்பதே ஆசை,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !