உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / சிறுமியின் வினோத நோய்; அக்குபஞ்சர் சிகிச்சையில் தீர்வு

சிறுமியின் வினோத நோய்; அக்குபஞ்சர் சிகிச்சையில் தீர்வு

கிருஷ்ணகிரி : உடலில் இருந்து, தானாக ரத்தம் வெளியேறும் நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி, 'அக்குபஞ்சர்' முறையில் குணமானார். கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி ஜெகநாதபுரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி நாகராஜின், மகள் அர்ச்சனா, 10; இரண்டரை மாதங்களாக, உடம்பில் வியர்வை வெளியேறுவது போல், தானாக ரத்தம் வெளியேறும் நோயால் பாதிக்கப்பட்டார். பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும், குணமாகவில்லை. இதையறிந்த, ஓசூரைச் சேர்ந்த அக்குபஞ்சர் நிபுணர் கங்காதரன், அவருக்கு சிகிச்சை மேற்கொண்டார். ஒரு சில நிமிடங்களிலேயே, அர்ச்சனாவின் உடலில் ரத்தம் வெளியேறுவது நின்றது. கங்காதரன் கூறியதாவது: சிறுமியின், வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட அதிக சூடு, நெஞ்சுப் பகுதியைத் தாக்கி, இதயத்திலிருந்து, ரத்தம் பம்பாகி செல்லும்போது, உடலின் பல்வேறு பகுதியில் இருந்து, ரத்தம் வெளியேறியுள்ளது. அக்குபஞ்சர் சிகிச்சையில், சூட்டை குறைக்க, ஊசி போடப்பட்டது. இரண்டு நிமிடங்களில், உடல் சூடு குறைந்து, ரத்தம் வெளியேறுவது நின்றது. இனி, அவரது உடலில் சூடு ஏற்படாதவாறு, பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அக்குபஞ்சர் டாக்டர் கங்காதரனுக்கும், சிறுமிக்கும், கலெக்டர் பிரபாகர் வாழ்த்து தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை