மேலும் செய்திகள்
இலையூர் சிவன் கோவிலில் மரகத லிங்கம் திருட்டு
19-Dec-2025 | 1
மூளைச்சாவடைந்த பெண் நால்வருக்கு வாழ்வளித்தார்
17-Dec-2025 | 3
ஆஸ்திரேலிய துப்பாக்கிச்சூடு: மடக்கி பிடித்தவருக்கு பாராட்டு
16-Dec-2025 | 1
ஒரே ஊராட்சியில் இருவருக்கு, பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே, தேக்கம்பட்டி ஊராட்சியில் உள்ள தாசனுாரை சேர்ந்தவர் பத்திரப்பன், 87; கிராமிய கலைஞர். இவர் தன், 15வது வயதில் இருந்து, கிராமிய கலைகளை கற்று வந்துள்ளார்; 60 ஆண்டுகளாக எவ்வித பிரதிபலனும் பார்க்காமல், பள்ளி மாணவ - மாணவியருக்கும், பெண்களுக்கும் வள்ளி கும்மி கிராமிய கலையை, இலவசமாக கற்றுக்கொடுத்து வந்துள்ளார். தற்போது சிறிய ஓட்டு வீட்டில் வசிப்பதுடன், இரண்டு பசு மாடுகளை வளர்த்து அதன் வாயிலாக கிடைக்கும் வருவாயில் வாழ்ந்து வருகிறார். எளிமையான வாழ்க்கையை கடைப்பிடிக்கும் கிராமிய கலைஞர் பத்திரப்பனுக்கு, மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்க அறிவித்துள்ளது. தாசனுார் கிராம மக்கள் சந்தோஷம் அடைந்துஉள்ளனர். ஏற்கனவே, மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியை சேர்ந்த இயற்கைவிவசாயி பாப்பம்மாளுக்கு, 107; 2021ம் ஆண்டு மத்திய அரசு, பத்மஸ்ரீ விருது வழங்கி உள்ளது. இப்படி ஒரே ஊராட்சியில், இருவருக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்திருப்பது போன்று, இந்தியாவில் வேறு எங்காவது கிடைத்திருக்க வாய்ப்பு குறைவு தான்.- நமது நிருபர் -
19-Dec-2025 | 1
17-Dec-2025 | 3
16-Dec-2025 | 1