உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல /  ராமேஸ்வரம் பக்தர்களை ஏமாற்றியவர் பழநி கிளி ஜோசியர்

 ராமேஸ்வரம் பக்தர்களை ஏமாற்றியவர் பழநி கிளி ஜோசியர்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் பூஜை செய்த போலி புரோகிதர் பழநி கோயில் கிளி ஜோசியம் பார்ப்பவர் என ஹிந்து சமய அறநிலையத்துறை தெரிவித்தது. தை அமாவாசையான ஜன., 18ல் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் பக்தர்களின் கூட்ட நெரிசலை பயன்படுத்தி போலி புரோகிதர் ஒருவர் முறையின்றி திதி, தர்ப்பணம் பூஜை செய்து ஏமாற்றி பண வசூலித்தார். இதுகுறித்த செய்தி தினமலர் நாளிதழில் வெளியானது. இதையடுத்து ஹிந்து சமய அறநிலையத்துறை ஆணையர் விசாரணை நடத்த உத்தரவிட்டார். இது குறித்து கோயில் இணை ஆணையர் செல்லத்துரை அறிக்கை: சம்பந்தப்பட்ட நபர் சுப்பிரமணியன். பழநி முருகன் கோயில் அடிவாரத்தில் கிளி ஜோசியம் சொல்பவர். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தில் படித்தவர் இல்லை. அக்னி தீர்த்த புரோகிதர் சங்கத்தினர் இவரை போல் 20 பேரை அழைத்து வந்து புரோகிதம் செய்ய வைத்துள்ளனர். இதற்கும் கோயில் நிர்வாகத்திற்கும் தொடர்பு இல்லை. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து புரோகிதர் சங்க செயலாளர் சுப்பிரமணியன் கூறும்போது, 'இது அபாண்டமான குற்றச்சாட்டு. எந்தக்காலத்திலும் இதுபோல் நாங்கள் செய்தது கிடையாது. அதிகாரி ஏன் அப்படி கூறுகிறார் என தெரியவில்லை' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

KRISHNAN R
ஜன 25, 2026 19:09

சமூக நீதி


KRISHNAN R
ஜன 25, 2026 11:12

செய்தவர் மற்றவர் மீது பழி தீர்ப்பது என்ற சொல் உண்டு


Balasubramanian
ஜன 22, 2026 18:43

கோவில் விஐபி டிக்கெட் கள்ள மார்க்கெட்டில் பக்தர்கள் முன்னோர்களுக்கு கொடுக்கும் திதியில் போலி பூசாரிகள் அரசன் எவ்வழி சட்டம் ஒழுங்கு அவ்வழியே


bharathi
ஜன 22, 2026 10:40

Anaithu Jadhi progidharo


Dandanakka
ஜன 22, 2026 08:26

அப்படி போடு..... நமக்கு ஒரு சீட்டு போடு....நல்ல காசு பாக்கலாம்...


அப்பாவி
ஜன 22, 2026 07:45

என்ன பூஜை செய்தாலும் செய்யாட்டாலும் நடப்பதுதான் நடக்கும். இந்த பரிகாரங்களுக்கு கிளி ஜோசியமே மேல்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை