மேலும் செய்திகள்
குழந்தைக்குள் ஒரு குழந்தை ஹூப்பள்ளியில் ஆச்சரியம்
03-Oct-2025 | 1
மஹாராஷ்டிரா அரசு பள்ளிக்கு உலகின் சிறந்த பள்ளிக்கான விருது
02-Oct-2025 | 1
வக்கீலாக தடம் பதித்த முதல் பழங்குடியின பெண்
25-Sep-2025 | 1
'ஏங்க... உங்களுக்கு மணியார்டர் வந்திருக்குங்க'கேட்டவுடனே வீட்டுக்குள் இருந்து துள்ளிகுதிச்சு வெளியே வருவாங்க! அவர்களுக்கு அப்போதைய குறைந்த பட்ச பணத் தேவையை பூர்த்தி செய்பவையாக அப்போதைய மணியார்டர் இருந்தது. 1880களில் தபால்துறை உதயமான போதே மணியார்டர் சேவையும் துவங்கப்பட்டு விட்டது.கடந்த, 2002ம் ஆண்டு முதல், திருப்பூரில் தபால்காரராக பணியாற்றி வரும், திருப்பூரை சேர்ந்த, மகேந்திரன் கூறியதாவது:ஹாஸ்டல் தங்கியிருக்கும் மாணவர், வெளியூரில் தங்கி பணிபுரியும் மகன், மகளிடம் இருந்து பணத்தேவையை எதிர்பார்த்து காத்திருப்பவருக்கு மணியார்டரின் அருமை தெரியும். விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவருக்கு, மணியார்டரில் தான் அப்போது பணம் வரும். அதனை வாங்கித்தான் காலேஜ் 'பீஸ்' கட்டுவார்கள்; அப்படியொரு நிலை இருந்தது.இருபது ஆண்டுக்கு முன், டையிங், சாயத்தொழிலை நம்பி, பிற மாவட்டங்களில் இருந்து திருப்பூருக்கு பலர் வந்தனர். திருப்பூரில் வாரம் முடியும் போது, சம்பளம் வாங்கி, திங்கள்கிழமை காலை அதனை ஊரில் உள்ள குடும்பத்தினருக்கு அனுப்புவர். இங்குள்ள தலைமை தபால் அலுவலகத்தில் 50க்கும் மேற்பட்டோர் காத்திருக்கும் நீண்ட வரிசை அன்று மணியார்டருக்கு இருந்தது.80 வயதை கடந்தவருக்கு இன்றும் ஓ.ஏ.பி., மணியார்டர் மூலம் அனுப்பப்படுகிறது. டிரஸ்ட் மூலம் பணம் இன்றும் அதிகாரப்பூர்வமாக மணியார்டரில் பலருக்கு செல்கிறது. ஒரு மணியார்டர் பார்முக்கு, 5,000 ரூபாய் அதிக பட்ச தொகை; ஒருவர் எத்தனை மணியார்டர் வேண்டுமானாலும் அனுப்பலாம் என்ற வசதி உள்ளது.மணியார்டர் என்ற வார்த்தையே மகிழ்ச்சியானது தான். முதன் முதலில், சிறுபூலுவப்பட்டியில் ஒரு பாட்டிக்கு, உங்களுக்கு முதியோர் உதவித்தொகை, 100 ரூபாய் வந்திருக்கு என சொல்லி, கையில் மணியார்டர் கொடுத்தேன். அந்த முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி தான்; மணியார்டருக்கு அர்த்தம்.அப்போது இருந்து இப்ப வரைக்கும் திருப்பூருக்கு வர்ற மணியார்டர்களை விட, இங்கிருந்து கிராமங்களுக்கு அனுப்புபவர்கள் தான் அதிகம். முன்னாள் ராணுவத்தினருக்கான கருணைத்தொகை இன்றும் மணியார்டர் மூலமே அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. நாள் காட்டி தேதியை கிழிக்கும் போது, மணியார்டர் தேதி வந்தால் எங்களை (தபால்துறை) எதிர்பார்த்து காத்திருப்பார்கள்.இவ்வாறு, மகேந்திரன் கூறினார்.- இன்று (ஜன., 1)உலக மணியார்டர்அனுப்பும் தினம்துவங்கப்பட்ட நாள்.
03-Oct-2025 | 1
02-Oct-2025 | 1
25-Sep-2025 | 1