வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பகலில் காலை ஆறு முதல் மாலை ஆறுமணிக்குள் ஆப்பரேஷன் வெச்சுக்கக் கூடாதா? நடப்பது விடியா அரசு, அதிலும் அணில் வேற அமைச்சரா இருக்கு. ஆட்டையைத் தவிர கரெண்ட் எல்லாம் கேரண்டி கிடையாது.
மேலும் செய்திகள்
போலீஸ் டைரி
03-Apr-2025
பல்லடம் : பல்லடம் அரசு மருத்துவமனையில், மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், மொபைல் போன் டார்ச் வெளிச்சத்தில் நோயாளி ஒருவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த அவலம் அரங்கேறியது.திருப்பூர் மாவட்டம், பல்லடம் தேசிய நெடுஞ்சாலையில், அரசு மருத்துவமனை உள்ளது. நேற்று முன்தினம் மாலை, பல்லடம் அருகே சுல்தான்பேட்டையில் நடந்த வாகன விபத்து ஒன்றில், ராமசாமி, 60 என்பவரின் காலில் பலத்த காயம் ஏற்பட்டு, பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அரசு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில், இரவு, 7.30 மணியளவில், திடீரென மின்சாரம் தடைபட்டது. யு.பி.எஸ்., இருந்தும், இயங்காததால், மின்சாரம் வரவில்லை. இதனால், மொபைல் போன் டார்ச் வெளிச்சத்திலேயே மருத்துவர்கள் நோயாளிக்கு சிகிச்சை அளித்தனர். இதனை நோயாளியுடன் வந்த உறவினர் ஒருவர், தனது மொபைல் போனில் வீடியோ எடுத்து வெளியிட்டார். இது குறித்து திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் மீரா கூறியதாவது: பல்லடம் அரசு மருத்துவமனை அருகிலுள்ள டிரான்ஸ்பார்மர் திடீரென பழுதானதால் அரசு மருத்துவமனை முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. வெளிச்சமின்மை காரணமாக, ஜெனரேட்டரை இயக்க சிறிது நேரம் ஆனது. இதற்கிடையே, நோயாளிக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள், அதனை பாதியில் கைவிடக்கூடாது என்பதால், மொபைல் போன் டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சையை தொடர்ந்தனர். அதற்குள், டிரான்ஸ்பார்மர் சரி செய்யப்பட்டு மின்சார சப்ளை வழங்கப்பட்டது.இந்த, 10 நிமிட நடவடிக்கைகளுக்கு இடையே, மொபைல் போன் டார்ச் வெளிச்சத்தில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததை, நோயாளியுடன் வந்த உறவினர் வீடியோ எடுத்துள்ளார். சிகிச்சையை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகவே மருத்துவர்கள் அவ்வாறு செய்தனர். மற்றபடி, வேறு எந்த காரணமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
பகலில் காலை ஆறு முதல் மாலை ஆறுமணிக்குள் ஆப்பரேஷன் வெச்சுக்கக் கூடாதா? நடப்பது விடியா அரசு, அதிலும் அணில் வேற அமைச்சரா இருக்கு. ஆட்டையைத் தவிர கரெண்ட் எல்லாம் கேரண்டி கிடையாது.
03-Apr-2025