உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / அரசு பள்ளியில் ஹிந்தி வேண்டும் கோரிக்கை அட்டையுடன் சிறுமி

அரசு பள்ளியில் ஹிந்தி வேண்டும் கோரிக்கை அட்டையுடன் சிறுமி

திருச்சி:திருச்சி, பாரதிதாசன் பல்கலை, 38வது பட்டமளிப்பு விழா, விமான நிலையத்தில், புதிய முனையம் திறப்பு விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக நேற்று, பிரதமர் மோடி, தனி விமானத்தில் திருச்சி வந்தார்.அவரை வரவேற்பதற்காக, பா.ஜ., கட்சியினர், வேன், கார், பஸ் ஆகியவற்றில் வந்திருந்தனர். அவர்கள், சாலை ஓரங்களில் நின்றபடி, கொடி அசைத்து, உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடி, சர்தார் வல்லபபாய் பட்டேல், சத்ரபதி வீரசிவாஜி போல வேடம் அணிந்தும் கட்சியினர் வந்திருந்தனர். பாரதிதாசன் பல்கலை பட்டமளிப்பு விழாவுக்கு, பிரதமர் மோடி சென்று திரும்பிய போது, 'அரசு பள்ளியில் ஹிந்தி பயிற்றுவிக்க வேண்டும்' என்ற வாசக அட்டையை ஏந்தியவாறு, இரண்டாம் வகுப்பு மாணவி துவாரகா மதிவதனி என்ற சிறுமி, கூட்டத்தில் தந்தையுடன் நின்றிருந்தார்.இந்த போட்டோ, தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

venugopal s
ஜன 03, 2024 22:07

ஏம்மா குழந்தை, நீ மோடி தாத்தாவிடம் நேரில் சொல்லி இருந்தால் அவர் உன்னை அப்படியே தம்முடன் தனி விமானத்தில் டெல்லி கூட்டிக்கொண்டு போய் ஹிந்தி படிக்க வைத்திருப்பாரே!


PR Makudeswaran
ஜன 03, 2024 21:34

பேத்தி சரிதான். கடிதத்தில் பெயர் எழுதி உள்ளாள்.குற்றம் கண்டு பிடிப்பதே ஜோலி. தமிழையே சரியாகப் படிக்க வேண்டும்.


mohanamurugan
ஜன 03, 2024 21:08

உத்தரபிரதேசத்தில் தமிழ் வேண்டும் பீகாரில் தமிழ் வேண்டும் மத்திய பிரதேசத்தில் தமிழ் வேண்டும் என பதாகைகள் ஏந்திய குழந்தைகளின் படங்களை வெளியிடுங்கள்.


raja
ஜன 03, 2024 18:00

இது தமிழர்களின் போராட்டமாக வெடிக்க வேண்டும்...திருட்டு திராவிட ஒன்கொள் கோவால் புற கொள்ளையர் கள் தங்கள் வாரிசுகளை இந்தி படிக்க வைபார்களாம். தமிழன் படிக்க கூடாதாம்...


swamy
ஜன 03, 2024 14:48

Fantastic ... இதை தான் எதிர் பார்கிறேன்....


Kundalakesi
ஜன 03, 2024 14:38

Hindi padicha vadukku matter therinjirum. Apadi thana dravidans?


Ram
ஜன 03, 2024 12:55

குழந்தைகள் இந்தி படிக்கவேண்டும் இல்லையா என்பதை பெற்றோர்கள் தான் தீர்மானிக்கும் , பள்ளிகள் இந்தி , தமிழ் , இங்கிலீஷை கற்றுக்கொடுக்க தயாராக இருக்கவேண்டும் .... அனால் இந்த திராவிட கழக திருடர்கள் நம் குழந்தைகள் என்ன செய்வேண்டும் என்று தீர்மானிப்பவர்களாக இருக்கிறார்கள் ... இது மனித உரிமை மீறல்


theruvasagan
ஜன 03, 2024 10:43

இந்தி வேண்டாம்னு சொல்றவனெல்லாம் போங்கடான்னு அந்த பாப்பா சொல்லுகிற மாதிரி இருக்கு.


VENKATASUBRAMANIAN
ஜன 03, 2024 08:48

திராவிட கும்பல் அவர்கள் வீட்டு பிள்ளைகளை காசு கொடுத்து இந்தி படிக்க வைப்பார்கள். ஆனால் அடுத்தவர்களுக்கு புத்தி சொல்வார்கள். இதுதான் திராவிட மாடல். மக்கள் புரிந்து கொண்டால் சரி


அப்புசாமி
ஜன 03, 2024 07:53

பேரைப் போடாமலே ஜெய்ஹிந்த் போட்ட பலே பேத்தி.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ