| ADDED : ஆக 31, 2011 11:48 PM
முதுநகர்: கடலூர் மத்திய சிறையை, ஆயுள் தண்டனைக் கைதிகள் தங்கள் கை வண்ணங்களால் வண்ணமயமாக்கி வருகின்றனர். கடலூர் மத்திய சிறையில் 412 தண்டனைக் கைதிகளும், குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் 19 கைதிகளும் உள்ளனர். இதில் ஆயுள் தண்டனைக் கைதிகள் இருவர், சிறைச்சாலை மதிற்சுவர்களில் தேசத் தலைவர்களின் படங்களை நேர்த்தியாக வரைந்தும், மனிதன் மனிதனாக வாழ வேண்டிய வழிகள் 18 என பொன்மொழிகளையும் எழுதியுள்ளனர். சிறைச்சாலையின் வெளிப்புற மதிற்சுவரில் ஆயுள் தண்டனைக் கைதிகளால் தீட்டப்பட்டுள்ள காந்தி, திருவள்ளுவர், பாரதியார் போன்ற தேசத் தலைவர்களின் தத்ரூபமான படங்கள், பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கின்றன.